தாயா? மார்க்காமா? தளராத உறுதியுடன் சஅத் இப்னு அபீவக்காஸ் [ரலி]
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நான்[சஅத்] இஸ்லாமிய மார்க்கத்தை நிராகரிக்காதவரை என்னுடன் பேசமாட்டேன் என்றும், உன்னவும் பருகவும் மாட்டேன் என்றும் என்தாயார் சத்தியம் செய்துவிட்டார்.மேலும்என்தாய், உன் பெற்றோரிடம் நீ நல்லமுறையில் நடந்து கொள்ளுமாறு அல்லாஹ் உன்னை அறிவுருத்தியுள்ளான் என்று கூறுகிறாய். நான் உன்தாய். நான்தான் இவ்வாறு[ இஸ்லாத்தை விட்டுவிடுமாறு] கட்டளையிடுகிறேன்! என்று கூறினார். இவ்வாறு மூன்று நாட்கள் இருந்ததால் என்தாயார்மயக்கமுற்றுவிட்டார்கள். அப்போது அவரது உமாரா எனப்படும்மகன், என் தாயாருக்கு தண்ணீர் கொடுத்தார். அப்போது என் தாயார் எனக்கெதிராக பிரார்த்தித்தார். அப்போது அல்லாஹ்,நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."
நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."
ஆகிய வசனங்களை அருளினான். என்று சஅத் இப்னுஅபீவக்காஸ்[ரலி] அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் 4789. வது ஹதீஸாக பதிவாகியுள்ளது.
இந்த ஹதீஸில், இஸ்லாத்தை விட்டுவிட வேண்டும் என்று தன்னுடைய தாய் மூன்று நாட்கள்உணவருந்தாமல், பருகாமல் மயக்கமுற்றபோதும், சஅத்[ரலி]அவர்கள், தன்னுடைய தாயின் கட்டளையைவிட இறைக்கட்டளைக்கு முக்கியத்துவம் அளித்த அந்த உறுதி இன்றைய முஸ்லிம்களிடம் காணமல் போனது ஏ ன்? திருமண நேரத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் தடம்புரண்டு வழக்கமான வரதட்சனை திருமணம் செய்வது ஏன்? இப்படி கேட்டால் நானும் எவ்வளவோ முயற்ச்சி பண்ணுனேன்நபிவழியில் மஹர்கொடுத்துதான் திருமணம் செய்யனும்னு. ஆனா எங்கம்மா'டேய்ய்! நான் சொல்றமாதிரி ஊரு ஒலகத்துல நடக்குறது மாதிரி நீ கல்யாணம் பண்ணலைன்னா நான்செத்துருவேன்என்று பிடிவாதமா சொன்னாங்க! அதுனால வேற வழியில்லாம 'நிர்பந்ததுல'தான் அப்படி பன்னவேண்டியதா போச்சு! என்று சொல்வதை பார்க்கிறோம்.
இது உண்மையா? தாய் கட்டளையிட்ட எத்தனையோ உலக விசயங்களை கண்டுகொள்ளாத இவர்கள், மார்க்கத்திற்கு முரணாண இந்த விசயத்திற்கு மட்டும் பெட்டிப்பாம்பாய் அடங்கிப் போவது ஏன் ? காரணம் ஒன்றுதான்.
சஹாபாக்கள் அல்லாஹ்வின் கூற்றுக்கும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் கூற்றுக்கும் முன்னுரிமை தந்தார்கள். இவ்விரண்டுக்கும் முரணான மனிதர்களின் கூற்றை, அது பெற்றெடுத்த தாயாக இருந்தாலும் புறந்தள்ளினார்கள். எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் இழப்போம். ஆனால் ஈமான் இழக்க மாட்டோம் என்பதுதான் அவர்களின் நிலை. காரணம் இந்த இஸ்லாத்தைப் பெறுவதற்கு அந்த நல்லறத் தோழர்கள் செய்த தியாகங்கள் அவர்களுக்கு இந்த உறுதியைத் தந்தது. ஆனால் நாமோ வாரிசு அடிப்படையில் பெற்றதனால் இந்த ஈமானின் சுவை நமக்குத் தெரிவதில்லை.
எல்லாம் வல்ல அல்லாஹ் சஅத் இப்னு அபீவக்காஸ் [ரலி] அவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை பெரும் பாக்கியத்தை நமக்குத் தந்தருள்வானாக!
Vote 🌟 comment 💭
YOU ARE READING
♥️ சஹாபாக்கள் வரலாறு ♥️ ✓
Short Story(completed)✔️ ✍️இஸ்லாம் எனும் சாந்திமார்க்கம் உலகெங்கிலும் பரவிட தங்கள் உயிர்களை உரமாக்கியவர்கள் ஸஹாபாக்கள்; அவர்களின் தியாகங்களை பின்னால்தள்ளி, அவர்கள் செய்ததாக கருதப்படும் சில தவறுகளை முன்னிலைப்படுத்தும் பிரச்சாரத்தை முறியடிக்க, அந்த சத்தியசீலர்கள...