முதல் சந்திப்பு

1.5K 32 7
                                    

அன்பின் எல்லை

அறிமுகம்

உண்மையான காதல் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறியும் என்பதே இந்த கதையின் கரு..காதலித்து திருமணம் செய்தவர்களும் சரி, பெற்றோர் பார்த்து திருமணம் செய்பவர்களும் சரி, திருமணத்திற்குப் பிறகும் தங்கள் உறவில் உறுதியாக இருந்தால் என்றும் எந்த ஒரு சூழ்நிலையாலும் அவர்களை பிரிக்க முடியாது..இது ஒரு சிறுகதை.. படித்து உங்கள் கருத்துக்களைப் பகிரவும்

அது ஒரு அழகிய காலை வேளை.பூக்கள் மீது பனித்துளி அதன் அருகில் அவள் முகம்.அவள் யார்?

அவள் தான் கதாநாயகி .முகத்தில் புன்னகையுடன் அங்கும் இங்கும் ஓடி விளையாடுகிறாள்.

அவள் சந்தோஷம் நீடிக்குமா?ஒரு அழகிய சிறு குடும்பம்.அப்பா சுந்தரம் அரசு வேலை பார்த்தார்.அம்மா பானு வீட்டை கவனித்தார்.அவர்களின் ஒரே சந்தோஷம் அவள் தான்.

அப்பா மிகவும் நேர்மையும் தன்மானமும் உடையவர்.அம்மா அன்பானவர்.

அவள் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறாள்.தேர்வு முடிவு வந்தது.பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சிப் பெற்றாள்.

மறுபக்கம் கதாநாயகன்

அவன் கோபத்தின் உச்சம். அன்புக்கும் அவனுக்கும் மிக தூரம்.பணம் வைத்து அனைத்தையும் வாங்கி விடலாம் என்பது அவன் கருத்து..

அவன்  பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சை எழுதியிருந்தான். குறைந்த மதிப்பெண்ணுடன் தேர்ச்சிப் பெற்று பணம் கொடுத்துச் சிறந்தக் கல்லூரியில் சேர்ந்தான்.

அவன் பெற்றோர் மைக்கேல் மற்றும் சுசி வேலைப் பார்த்தனர்.அவனுக்கு சுதின் என்ற தம்பி இருந்தான்.

கதாநாயகன் கல்லூரி..கதாநாயகி பள்ளி..இருவரும் சந்திப்பார்களா?

அன்பின் எல்லைWhere stories live. Discover now