💕 அன்னை 💕

354 42 104
                                    


அருணுக்கு வழமையை போல் வேலைப்பளு அதிகமாக காணப்பட்டது. சிறிது நேரத்தில் தனது வேலைகளை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றான்.

சோபாவில் அமர்ந்து கொண்டு,
"காவ்யா, இன்று மிகவும் களைப்பாக உள்ளது. காப்பி போட்டு வா" என்று தனது மனைவியை ஏவியபடி, களைப்பை போக்க வானொலியை on செய்ய,
அதில் "இன்று என்ன நாள் என்று எல்லோருமே அறிந்த விடயமே.." என்று கூற, அருண் காலண்டரை பார்த்தபடி யோசிக்கலானான். Mind ற்கு படாமல் போகவே, "என்றாலும் மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறோம். இன்று தான் என்னையும் உங்களையும் உலகிற்கு கொண்டு வந்த அன்னையர்களின் தினம். என்றபடி தாயின் அருமையை கூறிக்கொண்டு, சகோதரர் விமலின் வேண்டுகோளுக்கு இணங்க, இப்பாடலை எல்லா அன்னையர்களுக்கும் சமர்ப்பிக்கிறோம்"

"ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா நீயும்?
அம்மாவை வாங்க முடியுமா நீயும்?
ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும்
தாய் போல தாங்க முடியுமா?
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா.."

என்று ஒலிக்க, அருணின் கண்கள் குளமாக, பழைய நினைவுகள் அவனை அலைமோத தொடங்கின.

அருணின் தந்தை அவனது சிறு வயதிலே இவ்வுலகை விட்டு நீங்க, சொந்தபந்தங்களின் உறவுகளும் அன்றுடன் புதைந்து போனது. அருணிற்கு தந்தையாகவும் தாயாகவும் அன்றிலிருந்து தாயே இருந்தார். அருணின் உலகம் தாயை சுற்றியே இருந்தது.

அருண் கல்வியில் அதிகம் ஆர்வம் இருந்தாலும் அவனது வறுமை அவனை விரட்ட தொடங்கியது. தந்தை சிறிய கூலி தொழிலாளி என்பதால் பெரிய வருமானம் கிடைக்கப்பெற வில்லை. மெழுதுவர்த்தியின் ஒளியே ஓலையால் பின்னப்பட்ட குடிசையை ஒளிர செய்தது. இதனால் தாய் வருமானத்தை தேடவாகியது. தனது மகனின் ஆர்வத்தை கண்ட தாய் ஒவ்வொரு வீடுகளாக சென்று வேலை செய்து ஒரு வேளை சாப்பாட்டுக்கான பணத்தையும், மகனது கல்வி தேவைகளையும் நிறைவேற்றி வந்தார்.
சில நாட்கள் தாய் பசித்திருந்து மகனின் பசியை போக்கில் நாட்களும் இருக்கத்தான் செய்தன.

அன்னை (சிறுகதை) Where stories live. Discover now