1. ஆண்டவன் தண்டனை!

994 36 124
                                    

பொழுது விடியும் அந்த காலை வேளை. எதைப் பார்த்தாலும் அழகாக தோன்றும் நேரம். இன்று நிறைய பேர் தவறவிடும் சொர்க்கம்... சொர்க்கத்தைப் புறக்கணித்து, நரகத்தை நோக்கி செல்பவர் பலர்.

அந்த அற்புதமான காலையில் எழுந்த துர்க்கா. குளித்து முடித்து, சாமி கும்பிட்டு விட்டு, அடுப்படிக்குள் சென்றாள். வீட்டில் உள்ள அனைவரும் காலையில் எழுந்து பல் விளக்கியவுடன், நேராக வருவது அடுப்படிக்குள் தான்.

துர்க்கா வின் குடும்பத்தில் கணவன் ஆதி. மூன்று குழந்தைகள். பெரியவள் அபி. இரண்டாவது கிருஷ். கடைக்குட்டி அமிர்தா. மற்றும் மாமனார், மாமியார் இருந்தனர்.

காலை, மதிய உணவு தயாரித்து டைனிங் டேபிள் மேல் வைத்து விட்டு, அலுவலகதிற்கு செல்ல ஆயத்தமானாள்.

ஆபீசிக்கு வந்தவளுக்கு ஆச்சரியம்! யாரும் அவர்கள் இடத்தில் இல்லாமல் மேனேஜர் அறையில் நின்றிருந்தனர்.
எப்பொழுதும் "கூட்டம் சேராதே!" என்று இருவர் நின்று பேசிக் கொண்டிருந்தாளே திட்டுவார்
இன்று அவர் அறையில் அனைவரும் நிற்கின்றனரே! ஏதேனும் விஷேச மா? அவருக்கு ஒரு பையன், ஒரு பெண் இரு குழந்தைகள் இருக்கின்றனர். பெண் சின்னவள் பன்னிரண்டாம் வகுப்பு தான் படிப்பதாக கேள்வி. பையனுக்கு கல்யாணம் வைத்திருக்கிறாரோ? என்று எண்ணியவள், அவள் இருக்கைக்கு அருகில் நின்றபடி மேனேஜர் அறையைப் பார்த்தாள்.

சிறிது நேரத்தில் புவன் என்ற புவனேஸ்வரன் வந்தான். துர்க்கா அருகில் வந்து "என்ன மேடம் ஆச்சு? " என்று கேட்டான்.

" தெரியல புவன், நானும் இப்ப தான் வந்தேன். அங்கு போகலாமா? வேண்டாமா? னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்." என்றாள் துர்க்கா.

" நான் போய் பாக்கிறேன்." என்று கூறி விட்டு மேனேஜர் அறைக்கு சென்றவன், போன வேகத்தில் திரும்பி வந்து, " போலீஸ் வந்துருக்காங்க! ஏதோ விசாரிக்கிறாங்க." என்றான்.

"அப்போ நாமும் கட்டாயம் அங்க போகனும்." என்று கூறி விட்டு அவள் மேனேஜர் அறையை நோக்கி நடக்க, ஒரு காவலர் அறையிலிருந்து வெளியே வந்து, " உங்களையும் சப்இன்ஸ்பெக்டர் கூப்பிடுறார்" என்று கூறினார்.

பொழுது விடியும்!  (முற்றும்)Where stories live. Discover now