காதல் மயக்கமே!
இது உந்தன் காதல்
மயக்கமே!
அன்பின் உருக்கமே!
உன்மேல் என் அன்பின்
உருக்கமே!
ஆசையின் தயக்கமே!
நான் கொண்ட ஆசையின்
தயக்கமே!
இருவாின் நெருக்கமே!
நம்முடைய இதயத்தின்
நெருக்கமே!
அழகிய பதட்டமே!
நீ எனதுடைய அழகிய
பதட்டமே!
இசையின் தாளமே!
காதலின் காவியத்
தாளமே!
மழையின் வாசமே!
வான்நீல மேகத்தின்
வாசமே!
மலா்களின் மோகமே!
வண்ணக் கலவையில்
மோகமே!
ஆடலின் அபிநயமே!
உனதுடைய நாட்டிய
அபிநயமே!
கவியின் அற்புதமே!
என்னுடைய காதல்
அற்புதமே!
என் வாழ்வின்
தொடக்கமே!
நீ என்றென்றும்
என் தொடக்கமே!!!