தீட்சை
சிவோஹம் என்னும் ஜீவன் முக்த நிலையை அடையவதற்கான வாழ்க்கை முறைகளையும், தீட்சை முறைகளையும் சிவபெருமான் உமாதேவியினுடைய வேண்டுகோளுக்கிணங்கி திருவாய் மலர்ந்தருளிய சாஸ்திரங்கள்தான் ஆகமங்கள். சிவபெருமானுடைய திருவாயிலிருந்து வெளிப்பட்டதாலும், தேவியினுடைய திருவாய் வழி நமக்கு கிட்டியதாலும் சிவபக்தர்களுக்கு இது வாழ்க்கைமுறை என்பதாலும் இதற்கு "ஆகமம்" என்று பெயர்.
இதில் சமயதீட்சை என்னும் இந்த சதாசிவதீட்சையை பற்றி உரைக்கும் பொழுது ஆன்மீக வாழ்க்கையின் முதல் படியாக உரைக்கிறார். இது சிவனடியார்கள், சிவபக்தர்கள், இந்து மதத்தை, ஆன்மீக வாழ்க்கையை ஏற்று வாழ்பவர்களுக்கான, ஆன்மீக வாழ்க்கையை துவங்குவதற்கான முதற்படியாகும். இந்த சதாசிவதீட்சையை எல்லா மதத்தவரும், எல்லா ஜாதியினரும், ஆண்கள், பெண்கள் மற்றும் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாக உரைக்கிறார்.
விசேஷ தீட்சை என்பது ஆழமான ஆன்மீக அனுபவங்கள் மற்றும் சதாசிவனின் சக்திகளை அளிக்கும் இரண்டாம் நிலை தீட்சை. இதில் குருவானர் தீட்சைப்பெற்ற பக்தர்கள் ஞான வாழ்க்கையை வாழ்வதற்கு வழிநடத்துகிறார். தினந்தோறும் பயிற்சி செய்யவேண்டிய புனிதச் சடங்குகளை பயிற்றுவித்து வழிகாட்டுகின்றார்.
காமிக ஆகமத்தில், இறைவன் சதாசிவன் ிசிவ திட்சையைீ சமய தீட்சை என்றும் ஆன்மிக வாழ்க்கைக்கான முதல்படியாக குறிப்பிடுகின்றார். சிவசேவைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கும், சிவ பக்தர்களுக்கும், இந்து தர்மத்தை - ஆன்மீக வாழ்வை தங்கள் வாழ்க்கைப் பாதையாக எடுத்துக்கொண்டவர்களுக்கும் சேவையாக அளிக்கப்படுகிறது.
- பரமஹம்ஸ நித்யானந்தர்#பகவான் நித்யானந்த பரமசிவம்
#கைலாசா # ஜீவன்முக்த சமுதாயம்
YOU ARE READING
வேத பாரம்பரயத்தை வாழ்வதற்காக தீட்சை பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வழங்கப்படுகிறது
Non-Fictionவேத பாரம்பரயத்தை வாழ்வதற்காக தீட்சை பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வழங்கப்படுகிறது! வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்கள், லட்சக்கணக்கானவர்களுக்கு இந்துமதத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறையை வாழ்வதற்கான சதாசிவதீட்சையை அளித்திருக்கின்றார்கள். ச...