என் வாட்பேட் சொந்தங்களுக்கு வணக்கம்...
என்னை எவ்வளவு பேருக்கு நினைவு இருக்குன்னு தெரியல... மூணு வருஷம் முன்னாடி இங்கே தான் எழுத ஆரம்பிச்சேன்... ஒரு 2 கதை முடிச்சேன்.. அப்புறம் பெரிய பிரேக்... 2 கதையையும் Amazon Kindle la போட்டேன்.
திரும்ப ஒரு கதை. விழித்தெழு கண்ணம்மா. இன்னும் முடிக்காம பாதில நிக்கிது. அதற்கே என் மேல எல்லோரும் செம்ம காண்டுல இருப்பீங்க. இதோ வந்துறேன்னு போனவ ஒரு வருஷம் ஆகியும் இன்னும் ஆள காணும்.. மெசேஜ் மேல மெசேஜ் போட்டும் இன்னும் அப்டேட் வரல. எங்களை இவ்ளோ நாள் காத்திருக்க வச்சிருக்க கூடாதுனு கண்டிப்பா நினைச்சிருப்பீங்க. உங்களோட நினைப்பு சரிதான்...
ஏனோ நான் எழுத துவங்கிய போது தேர்ந்தெடுத்த கதை கருவுக்கும், இப்போ கதை பயணிக்கிற திசையும் வேற வேறையா இருக்கு. கதை மொத்தமும் negative நோக்கி போற மாதிரியே எனக்கு தோணுது. தோணுன நொடிக்கு மேல ஒரு எழுத்து கூட என்னால எழுத முடியல. நானும் கதையை என் வசதிக்கு வளைக்க பாக்குறேன் பட் Damage is already done. எனக்கு இருக்கும் குழப்பத்தில் உங்களையும் சேர்த்து தவிக்க விட்டுட்டேன். இதுக்கு மேல அந்த கதையை தொடர முடியும்னு எனக்கு தோணல... இப்போ என்ன தான் சொல்ல வரேன்னு நீங்க கேக்குறது புரியுது, உங்கள காக்க வைத்ததற்கு மன்னிசிடுங்க மக்களே. நான் இங்கிருந்து அந்த கதையை நீக்கிடுறேன். ஆனால் அதே கருவை வைத்து வேறு மாதிரி முழுதும் நேர்மறையாய் எழுத முடிவு செய்திருக்கேன். எப்போது என்று தான் தெரியவில்லை.
அடுத்து மன்னிப்பு படலம் முடிஞ்சு இப்போ என் பயணத்தில் என்ன போயிட்டு இருக்குனு சொலிட்றேன். Amazon நடத்திய pen to publish போட்டிக்கு ஒரு சிறுகதை 'செல்வி. திருமதீஸ்' என்ற பெயரில் எழுதிருக்கேன். அமேசான்ல இருக்கு. இப்போ அதை online ல ரன் செய்ய போறேன். அதோட tamilnovelwriters.com நடத்தும் போட்டியில் 'கள்வனே கள்வனே' என்ற தலைப்பில் ஒரு கதை எழுதிட்டு இருக்கேன்.
என்னுடைய எழுத்து தொடங்கிய இடம் இங்கு தான். அப்போ இருந்தவர்கள் இப்போதும் இருக்காங்களான்னு தெரியல. எவ்வளவு பேர் என்னை நியாபகம் வச்சிருக்கீங்கனும் தெரியல. இருந்தாலும் என் எழுத்து அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது இங்கிருப்பவர்களுக்கு முறையா தெரிவிப்பது என் கடமை. அதற்கு தான் இந்த பதிவு.
இனி என்னுடைய கதைகளை Deepababuforum.com மற்றும் tamilnovelwriters.com தளத்திலும் நீங்கள் படிக்கலாம். Amazon Kindle-லிலும் படிக்கலாம். கதை பற்றிய அறிவுப்புகளை தெரிந்து கொள்ள பேஸ்புக்கிலும் என்னை தொடரலாம். Facebook id: Sivapriya
வேற ஏதாவது என்கிட்ட சொல்லணும் தோணுனாலும் இங்கே சொல்லலாம். திட்டுறதா இருந்தா பார்த்து பதமா இன்பாக்ஸ் வந்து தனியா திட்டுங்க. மீ பாவம்☹️
நெஞ்சம் நிறைந்த நேசத்துடனும், நன்றியுடனும் விடைபெறுகிறேன்,
சிவப்பிரியா.