அவளுடைய வீட்டிற்கு வந்து பார்க்கும்போது ஒரே கூட்டமாக இருந்தது.பலபேர் முகங்களில் சோகம் அப்பிக் கொண்டு நின்றிருந்தனர். உள்ளே ஒரே அழுகுரலாக கேட்டது.
அவள் உள்ளே போவதை யாருமே பார்க்கவே இல்லை. அவர்கள் பாட்டுக்கு பேசிக்கொண்டிருந்தார்கள்; பாவம்பா! ரொம்ப சின்ன பொண்ணு! சின்ன வயசுலயே இப்டி ஆகிருச்சே! ரொம்ப பாவம் அவங்க அம்மா!-இதைக் கேட்டவுடன் அவள் அப்படியே அதிர்ச்சியில் நின்று விட்டாள்.இந்த வீட்டில் இருக்கும் ஒரே சின்ன பொண்ணு அவள் தான்! அப்படி இருக்கும்போது இவர்கள் யாரைப் பற்றி பேசுகிறார்கள்? நம்முடைய அம்மாவையா பாவம் என்று கூறுகிறார்கள் என்று ஒரே சந்தேகமாகவும் அதிர்ச்சியாகவும் வேகமாக உள்ளே சென்று பார்த்தவள் மேலும் அதிர்ச்சியானாள். அங்கே அவளை தான் படுக்க வைத்திருந்தார்கள்; கழுத்தில் மாலைபோட்டு, முகத்தில் மஞ்சள் பூசி, நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு வைத்து, புதிதாக ஒரு சேலையை மேலே போர்த்தி இருந்தார்கள்.நான் இங்கே தான் நிற்கிறேனே! அப்போது என்னை மாதிரியே இருக்கிற அது யார்? ஒரே குழப்பமாக இருந்தது அவளுக்கு.
அவளுடைய அம்மாவைத் தேடிப் பார்த்தால், அருகில் தான்- கண்களில் நீர் வழிந்து நிறைய அதைத் துடைக்கக் கூட இல்லாமல் தேம்பிக் கொண்டே இருந்தார் பேச முயற்சி செய்தும் முடியாமல்! பல மணி நேரமாக அழுதிருப்பார் போல!!
அவரிடம் சென்று அம்மா! என்றாள்.ஏன் மா அழுகறிங்க? அம்மா அழுவாதம்மா! நான் இங்க இருக்கேன் மா! என்னப் பாருங்கம்மா!! என்றாள்.அவரிடம் ஒரு ரியாக்சனும் இல்லை.அவள் பேசியதை கவனிக்கவே இல்லை?!?அம்மாவைத் தொட்டுக் கூப்பிடலாம் என்று கையை அவர்கள் மேல் வைத்தால் தொடவே முடியவில்லை! கை அப்படியே உள்ளே போனது!!என்ன இப்படியெல்லாம் நடக்குது! படத்துல,கதைல படிக்குற மாறி நெஜத்துல நடக்குது! இப்போ என்ன பண்றது?அவளுக்கு ஒன்றும் புரியாமல், இப்போது அழுகையாக வந்தது.அம்மா! என்னப் பாரும்மா? எனக்கு பயம்மா இருக்கும்மா! அழுகாதம்மா.....அம்மாமாமா எனத் தேம்பினாள்.ஆனால் கண்களில் இருந்து கண்ணீர் வரக் காணோம்!
அவளுக்கு கோபமாக வந்தது!! அம்மாமா என்று கத்தினாள்! கதறினாள்!!ஓடினாள்!!! துடித்தாள்!?
ஊகூம்...ஒன்றும் நடக்கவில்லை! எல்லோரும் மறுபடியும் கூடி ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்கள்.
YOU ARE READING
ஆன்மா
HorrorEnnoda dream la vantha kadhai.. simple kutti story! padichuttu comments pannunga dears! This is my second story