"எதுக்கு நிலா உன்னால் என்னை புருஷனாக ஏத்துக்கு முடியல்லை?" எனக் கேட்டான் புகழ் அடிபட்ட குரலில்.
அவர்களின் உணவு மேசைக்கு மேலே இருக்கும் கசங்கிய டிசியூவை எடுத்து அவன் கைகளில் திணித்தாள் நிலா.
"இந்த டிசியூவால் உன் கையை துடைச்சிக்க" என்று நிலா கூற
"அது எப்படி முடியும்? இந்த டிசியூவை இன்னொருத்தர் யூஸ் பன்னி இருக்காங்களே" என்றான் புகழ்.
"இன்னொருத்தர் யூஸ் பன்ன டிசுவையே உன்னால் பயன்படுத்த முடியாதப்போ, எத்தனை பொண்ணுங்க யூஸ் பன்ன உன்னை என்னால் எப்படி புருஷனாக ஏத்துக்க முடியும்?" என்று கேட்டாள் நிலா. புகழ் தலை குனிந்து நின்றான்.
💞💞💞💞💞💞💞💞💞💞
"மதி நான் உன்னை உண்மையாக காதலிக்கிறேன்" என்று ஜீவா கூற
"எத்தனை நாளைக்கு சேர்? உங்க தேவை முடிஞ்ச அப்பொறம் நான் உங்களுக்கு தேவையில்லாமல் போயிருவேனே" என்றாள் மதி.
"மதி அப்படி பேசாத மதி" என்று ஜீவா கவலையாகக் கூற
"அதெப்படி சேர் பன்னுகிற தப்பையெல்லாம் பன்னுவிங்க. அப்பொறம் அப்பாவி மாதிரி பேச வேண்டியது. நான் தெரியாமல் கேட்குறேன். எத்தனையோ பசங்க கூட தொடர்பில் நான் இருந்து எந்த பொண்ணையும் நிமிர்ந்து பார்க்காத உங்க கிட்ட என் காதலை சொன்னால் நீங்க ஏத்துப்பிங்களா?" என்று மதி கேட்க, பதில் கூற முடியாமல் திணறினான் ஜீவா.
"பொண்ணுங்களிற்கு மட்டும் தான் கட்பு இருக்கனுமா? யேன் உங்களுக்கு எல்லாம் இல்லையா? கட்பு இரண்டு பாலாருக்கும் பொதுவான விஷயம். அதை புரிஞ்சி இருந்திங்கன்னா இந்த நிலமையில் நின்றுகிட்டு இருக்க மாட்டிங்க சேர்" என்று கூறிய மதி அவ்விடத்தில் இருந்து வேகமாக நகர்ந்தாள்.
ஜீவா அவள் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
*********************************
இது ஒரு குறுநாவல். பிரதிலிபி போட்டியிற்காக எழுதப்படுகிறது.உங்கள் கருத்துக்களை மறவாமல் பகிருங்கள்.
YOU ARE READING
காதல் கிறுக்கா (முடிவுற்றது)
Randomநாயகர்கள் இரண்டு பேருமே வுமனைசைர்ஸ். அவங்க வாழ்க்கையில் அழகான தென்றலாக ஹீரோயின் இரண்டு பேரும் வருகிறாங்க. அந்த தேவதைகளோட வருகை இவர்களோட வாழ்க்கையை சுவர்க்கமாக்குகின்றதா? இல்லை தேவதைகளின் வாழ்க்கை நரகமாக்குகின்றதா என்பது தான் கதை ஒருவன் ஒருவளுக்கே எ...