அஸ்ஸலாமு அலைக்கும்..
இது எனது மூன்றாவது இஸ்லாமியக் கதை. ஆனால் ஆறாவது கதையாக எழுத வேண்டி வந்துவிட்டது. இதுவரை நான் எழுதிய முந்தைய கதைகளுக்குக் கிடைத்த ஆதரவினாலே இந்தக் கதையை எழுதும் ஊக்கம் என்னுள் நுழைந்தது.
ஜஸாகல்லாஹ்!
வானவில்லில் அம்புபூட்டி..
கதைக்களமாக கத்தார் நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
இதுவரை நேரில் பார்த்திராத இடமாயினும் கொஞ்சம் அலசிப்பார்த்து என்னால் முடிந்தவரை சிறப்பாக எழுத முயல்கிறேன்.
கத்தார் நாட்டில் பேசப்படும் மொழிகள் ஆங்கிலம் மற்றும் அறபு. ஆயினும் தமிழிலே தருகிறேன்.
கதையில் இடம்பெறும் அத்தனை சம்பவங்களும் கற்பனையே..
📌 இக்கதையின் அத்தியாயங்கள் இப்போதைக்குப் பதிப்பிக்கப்படாது. இரு தடவைகள் கதையை முறையாகப் பதிப்பிக்க முயன்று தோற்றதால் கதையை 100% ஒழுங்கமைத்தே பதிவிட முடிவு செய்துள்ளேன்.
முன்பு இக் கதையை ஆர்வமாக வாசித்தவர்களிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
கதை ஒழுங்கமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது..
இன்ஷா அல்லாஹ், இப்பொழுதே இல்லாவிடினும் எப்பொழுதாவது கட்டாயம் பதிப்பிக்கப்படும்.இந்தக் கதையை விரும்பி வாசித்தோர் அநேகமானோர் என்பதனை இங்கிருந்து இதை நீக்கிய பின்புதான் புரிந்துகொண்டேன். ஒரு சில காரணங்களால் கதையை எழுதுவதற்காகப் போட்ட திட்டம் குலையவே, வேண்டா வெறுப்பாக எழுதிக் கொண்டிருந்த எனக்கு இதனை ஒழுங்குபடுத்தி ஈடுபாட்டுடன் எழுத வேண்டுமென்ற எண்ணம் பிறந்தது அதனால்த்தான்.
வாசக நண்பர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் பல ❤
நன்றியுடன்,
Nuha Zulfikar.
YOU ARE READING
வானவில்லில் அம்புபூட்டி..
Spiritual#6 காதல், நட்பு, தாய்ப்பாசம், தந்தையன்பு, சோகம், சொந்தம், அன்பு, அரவணைப்பு, ஏமாற்றம், பாடம், etc etc.. ஒரு புது முயற்சி..