மரித்துப்போன மனிதம்

38 4 18
                                    

செவிலியர் தமிழினியின் மொபைல் விடாமல் அடித்துக்கொண்டிருக்க அதை எதும் அறியாது கொரானாவிற்கான முழுஉடை அணிந்து வைரஸ் பாதித்த நோயாளியோடு போராடிக்கொண்டிருந்தாள்...

ஆனால் அவள் மனதோ "திருமணத்தை நிறுத்திரலாம் என்று சொல்றாங்க டி எனக்கு பயமா இருக்கு நீ கிளம்பி வா"  என்ற அவள் அம்மாவிற்கு

"அம்மா உங்க மாப்பிள்ளை பார்த்துக்குவாறு மா .. நிறுத்தலாம் விட மாட்டாரு " என்று அம்மாவை சமாதானம் செய்தவளின் மனம் என்னவோ பயத்தை கவ்விக் கொண்டது

அதை பற்றி யோசனையில் இருந்தவளுக்கு " எனக்கு இந்த மாஸ்க் வேணாம்னு சொன்னா கேக்க மாட்டியா மா " என்று கத்தும் நோயாளியின் குரல் கேட்க அவ்விடம் செல்வதற்குள் அந்த செவிலியரை தள்ளிவிட்டிருந்தார்

அதில் கோபம் வந்தாலும்  அமைதிப்படுத்திக்கொண்டவள்  "உங்க நல்லதுக்கு தானே ஆக்ஸிஜன் மாஸ்க் வைக்கிறோம் .. நீங்க இப்படி பண்ணால் ட்ரீட்மெண்ட் எப்படி கொடுக்கிறது" என்று  பேசியவாரே மீண்டும் அதை வைக்க செல்ல

அவரோ " எனக்கு ஒன்னும் வேணாம்னு சொல்றேன் புரியாதா உனக்கு நான் என் குடும்பத்துட்ட போனும் .. விடு என்னை " என்று எழுந்திருக்க முயற்சிக்க அதை இவர்கள் தடுக்க முயலும் போது கோபத்தில் இவர்கள் மேல் எச்சியை துப்பி விட்டார்

அதும் இவள் அருகில் இருந்ததால் இவளின் முகத்தில் எச்சில் இருக்க அவளை சுத்தம் செய்துவிட்டு வருமாறு அனுப்பினர் ..

சுத்தம்‌ செய்தவள் மனதில் தனக்கும் கொரானா பாதிப்பு வந்துவிடுமோ என்ற யோசித்தவாரே மொபைலை பார்த்தவள் வருங்கால கணவன் கவினிடமிருந்து 10 அழைப்புகளுக்கு மேல் வந்திருப்பதை கண்டதும் பதட்டம் தொத்திக்கொண்டது

அவனுக்கு அழைப்பு விடுக்க ஹலோ என்றதும் " ஏண்டி .. எத்தனை தடவை கால் பண்றேன் எடுக்கமாட்டியோ.. என் அப்பாவிற்கு உடம்பு முடியல .. ஹாஸ்பிடல இருக்காரு என்று சொல்லியும் உனக்கு வேலை தான் முக்கியமா போச்சுல்ல" என்க

"இல்லங்க .. இங்க லீவ்வு " என்று விடையளிக்க இருந்தவளை தடுத்தவன்

" நீ சொல்ற கதையை கேக்க தயாரா இல்லை உன் ராசினால தான் கொரானால நம்ம கல்யாணத்தை தள்ளி வச்சு அப்பாவுக்கும் இப்படி ஆகிட்டு .. அதுனால இந்த கல்யாணத்தை நிறுத்திரலாம் .. உன் வேலையையே நீ கட்டிட்டு அழு " என்று அவள் பேசுவதை எதும் காதில் வாங்காமல் வைத்தவன் பேச்சில் அதிர்ந்தவளின் கண்ணில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது ..

மனதோ "கொரானா வந்ததுக்கும் என் ராசிக்கும் என்ன சம்பந்தம் .. நல்ல வேளை இப்பவே அவுங்க சுயரூபம் தெரிஞ்சுட்டு .. ஒரு வேலை கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் அவுங்க அப்பாக்கு இப்படி ஆகிருந்தா என் நிலைமை என்ன ஆகுறது" என யோசித்துக்கொண்டிருக்க

" அய்யோ அம்மாக்கு தெரிஞ்சா அழுது கரைஞ்சுருவாங்களே.. ஊரே பேசி அம்மாவை ரணப்படுத்திடுமே..எவ்வளவு கனவோடு இருந்தேன் ..  இனி கல்யாணம் நடக்குமா" என்று யோசிக்க மனது பதறியது..

அதில் அழுது கரைந்துக் கொண்டிருக்க "தமிழினி  டாக்டர் உன்னை சீக்கிரம் வரச்சொன்னாங்க..  அந்த பேசண்ட் மாஸ்க் வச்சுக்காம முரண்டுபிடிச்சதால ஆக்ஸிஜன் குறைந்து மூச்சுத்திணறல் வந்துட்டு  " என்று சகத்தோழி அழைக்க கண்ணை துடைத்துக் கொண்டு அந்த நோயாளியை காப்பாற்ற ஓடினாள்

நட்பூஸ் நானும் போட்டிக்காக கதையோட ஓடி வந்துட்டேன்.. இதில சில உண்மை சம்பவங்களும் இருக்கு.. மக்களை இந்த நோயில் இருந்து காப்பாத்த காவல் துறையும் மருத்துவத்துறையும் போராட்டி இருக்கு.. எல்லா துறைகளிலும் உழைத்தா காசு மட்டும் தான் கிடைக்கும் ஆனால் மருத்துவத்துறையில் தான் காசோட சேர்ந்து நோயும் வரும் .. சோ ப்ளீஸ் மக்களே நோயோட தீவிரத்தை உணர்ந்து வீட்டிலே இருங்கள் பாதுகாப்பாய் இருங்கள்

You've reached the end of published parts.

⏰ Last updated: Apr 25, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

மரித்துப் போன மனிதம்Where stories live. Discover now