28

23 5 7
                                    

ஜன்னலோர தனிமை

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

ஜன்னலோர
தனிமை.
கையில் தேநீர்!

அக ஏக்கம்
விழி பார்வை!
விடியற்காலை
வசந்தம் தேடி சிறகு விரித்து
பறக்கும் பறவைகள் கூட்டம்!.

ஆதவன் ஒளி வீச
அகிலமெங்கும்
வெளிச்சம்!.

ரசனை நெஞ்சுக்குள்
தவிப்புகள் கண்ணீராக.
காலம் மாறியது
இந்த தேசம் இன்னும் மாறாமல்
எத்தனை நாட்கள்
தொடருமோ இந்த சிறைவாசம்!.

நெருப்பு
பிழம்பில்
தேநீர் துளிகள் ஆவியாக.
என் கைகள் இன்னும்
சுடவில்லை! - என் கண்ணீர் துளிகள்
குளிர்ச்சியில்!.

சுதந்திரம்
வாங்கிவிட்டோம்!
எப்பொழுது யாரிடம் எங்கே.
மங்கை சுதந்திரம்
யாரிடம்!- ஆணாதிக்க பேரிடம்.

இன்னும் இன்னும்
எத்தனை நாளோ?
வீட்டுச்சிறையில் சிறகின்றி
கிடப்பது.

அழகே ரசிக்கிறேன்
பயந்து பயந்து.
பறவைகளுக்கு கிடைத்த
சுதந்திரம் எனக்கு எப்போ?.

நாடு தாண்டி
வந்தால் மட்டும் அகதியல்ல!
பிறந்த வீட்டில் சுதந்திரம்
இல்லாமல் இருப்பவளும் அகதியே.
நானும் அகதியாக
என் வீட்டில்.

திரைச்சீலை விலகி
கண்ணாடிக்குள்.

Hiiii guys ... Intha Kavithai ennodathu illa ... Na mela upload panniruka na varanja drawing ya pathu orru sir elluthuna kavithai ...Itha read pannathu apidi orru happiness ennakulla ...Usual la en manasu sari illa na tha ethavathu draw pannuven ... First time ennoda drawing ku Ennaku orru Kavithai kidachuruku ... I can't explain my happiness in words ... Na draw pannatha first upload pannathu wattpad la tha ...  Ennoda sila frds kuda nee enna avalavu nalla va draw panranu enna kindal pannirukanga...Appolam na rompa feel panniruken ...Wattpad la na draw pannatha upload panni athuku Vara comments pakum pothu rompa happy ya irrkum ... Enna encourage panna ellarukum rompa thanks  ... Thanks for your support frds❤❤❤...

My drawings ...Where stories live. Discover now