காஷியின் குமுறல்..!!

264 31 183
                                    

காசி..

கங்கை கரையோரம் அமைந்த இந்துக்களின் புனிதத்தலம்..

நாம் செய்த பாவங்களை துடைக்க அந்தப் பாவையின் சரணங்களைப் பற்றுகிறோம்..

அவளின் பெயரைக் கொண்ட பெண் நான்..

காஷிபாய் பாஜிராவ் பல்லார்டு..!!

பலர் எம்மை அறிந்திருப்பீர்.. என் மனதிலுள்ளதை தங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

இது எனது கதை..

இந்த காஷியின் கதையை கேட்க உங்களை அன்புடன் வரவேற்கிறேன்..

*****

பதினெட்டாம் நூற்றாண்டு..!!

அறிவியலும் ஆங்கிலேயர்களும் நம்மை அடிமை படுத்த முடியாத காலம்..!!

நம் பழமை வாய்ந்த துருபிடித்த இந்தியாவில் திடமாக ஆட்சிப் புரிந்த மாபெரும் வம்சங்களில் முக்கியமான ஒன்று..

மராட்டிய சாம்ராஜ்யம்..!!

மணம் வீசும் மல்லிகைப் போன்ற மணிநகரம்..

மதி கொஞ்சும் மக்கள்..

மன அமைதி நிறைந்த மடங்கள் மற்றும் மாளிகைகள்..

அனைத்தும் இருந்த போதும் அரசனின்றி தவித்தது அத்தேசம்..

இங்கு அரசரை "பேஷ்வா" என்று தான் அழைப்பர்..

தன் வீரத்துடன் பகுத்தறிவைக் கொண்டு பேஷ்வா ஆனார்..

பாஜிராவ் பல்லார்டு..

என் ஆருயிர் கணவர்..💗

அவரின் வீரத்தை கண்டு அந்த விண்ணும் வியக்கும்..

அத்தோடு அவர் விவேகத்தை அவ்வானும் வாழ்த்தும்..

தன் வசீகரத்தால் வானிலுள்ள பேரழகிகளைக் கூட கவரும் கள்வர்..

போருக்கு சென்றவர் மீண்டும் நலமுடன் திரும்ப வேண்டும் என்று கடவுளிடம் வேண்டும் சாதாரண பத்தினி தான் நான்..

அக்கடவுளும் என் வேண்டுதலை பலமுறை நிறைவேற்றினார்..

ஆனால் இம்முறை..

காஷியின் கதை..!!Where stories live. Discover now