அத்தியாயம் - 1

35 2 0
                                    

புவி | கி.பி. 2020

மாறன் அவளது கண்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த நட்சத்திர உணவகத்தின் இருள் கலந்த மென்மையான தங்க நிற ஒளியில் யாழினி சிறகுகளைக் கழட்டி வைத்த தேவைதையைப் போலவே தெரிந்தாள்.

இவனது பார்வையைத் தாளாமல் யாழினி மெல்லிய புன்னகையோடு தலையைத் தாழ்த்திக்கொண்டாள், மெனு கார்டைப் படிப்பவள் போல நடித்தாள்.

மாறனுக்கு அவசரமாய் ஒரு கவிதை தேவைப்பட்டது. 'நிலா... தேவதை... வானம்... மழை... ரோஜா... வானவில்... ஐஸ்கிரீம்...' அவனது மனம் வரிசையாக எழுவாய்களைப் பட்டியலிட்டது.

"ஐஸ்க்ரீம்!" மாறன் 'யுரேகா!' பாணியில் சொன்னான், 'மைண்ட் வாய்ஸ்' என்று நினைத்துச் சத்தமாகவே சொல்லிவிட்டான்!

"ஐஸ்க்ரீம்? அதுக்குள்ளவா? இன்னும் சாப்பிடவே இல்லப்பா!"

யாழினி அவனைப் புன்னகையுடன் கேட்டாள்.

"அது... வந்து..."

மாறனின் தயக்கமும் திண்டாட்டமும் யாழினியின் புன்னகையைச் சிரிப்பாக்கின. மாறன் அவளது சிரிப்பில் சொக்கிப் போய் மீண்டும் அவளையே பார்க்கும் 'ஆள்'நிலைத் தியானத்தில் ஈடுபட்டான்.

"ஹே, என்னப்பா? அடிக்கடி கனவுக்குள்ள போயிடுற?"

'கனவுதான்! எத்தனை நாளைய கனவு?! உன்னைப் பார்த்த அன்றே என்னுள் பட்டாம்பூச்சிகள்! இப்படி இங்கே உன்னோடு அமர்வேன் என்று இன்று காலைவரை நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!'மாறனின் நெஞ்சம் சுயவிளக்கம் அளித்துக்கொண்டது.

'அது சரி, என்னைவிட்டு விலகி விலகிப் போனவள், என்னைக் கண்டுகொள்ளாமல் இருந்தவள் எப்படித் திடீர் என என்னோடு இருக்கிறாள்?'

சட்டென ஒரு உள்குரல் சந்தேகத்தைக் கிளப்பியது!

யாழினி இவனது திண்டாட்டத்தை இரசிக்கத் தொடங்கி, அவளும் இவன் கண்ணொடு கண்ணினை நோக்கு ஒக்கினாள்!

"ஆர்டர் சொல்றீங்களா மேடம்?"

பரிமாறுபவன் குறுக்கிட்டான்.

கலாவிக் (Kalavik)Where stories live. Discover now