கலாவிக்
நீனா சைகை காட்ட வாசலில் இருந்த இரண்டு காவலர்கள் வெளியேற முயன்ற ஜீவாவைத் தடுப்பதைப் போல அவனுக்கு முன் வந்து நின்றனர்.
"ஜீவா... நில்லு, இல்லேனா உன்னைக் கைது பண்ண வேண்டி இருக்கும்!"
நீனா போலியான கோவத்தோடு அவனை நோக்கிச் சொன்னாள்.
ஜீவா மெல்ல இவளைத் திரும்பிப் பார்த்து அலட்சியமாய்ப் புன்னகைத்தான்.
"அது உங்களால முடியாது, டாக்டர் நீனா!"
"சோதிச்சுப் பார்க்க விருப்பமா?"
நீனா ஒரு கையை இடுப்பில் வைத்துக்கொண்டு சீண்டலாகக் கேட்டாள்.
"பாருங்க... நீங்கதான் ஏமாந்து போவீங்க! என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியும்னு நினைக்குறேன்!"
ஜீவா மெல்லிய எரிச்சலுடன் தோள்களைக் குலுக்கிச் சொன்னான்.
"நல்லா தெரியும் கமாண்டர் ஜீவா! தெரிஞ்சதனாலத்தான் முக்கியமான வேலைலாம் விட்டுட்டு உங்க பின்னாடி அலைஞ்சிட்டு இருக்கேன்! உங்களுக்குத்தான் உங்களைப் பத்தி முழுசாத் தெரியுமான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு!"
நீனாவும் குரலில் எரிச்சலைக் காட்டிப் பேசினாள்.
"என்னப் பத்தி எனக்கே தெரியாதா! ஏன் இப்படி என்னைப் போகவிடாம புடிச்சு வெச்சிக்கிட்டு உளறிட்டு இருக்கீங்க? வழிய விடுங்க!"
ஜீவா முன்னால் நகர முற்பட்டான், இரண்டு காவலர்களும் தங்கள் கையில் இருந்த மின்லத்தியை அவனது முகத்துக்கு நேராய் நீட்டினர்.
"நான் ஒன்னும் உளறல டா! நீதான் கிறுக்கு மாதிரி பேசிட்டு இருக்க!"
நீனா அவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தாள்.
ஏற்கனவே அவள் சட்டென மரியாதைகளைக் கைவிட்டு 'டா' என்றதில் இலேசாய் அதிர்ந்திருந்தவன், அவள் தன்னை நெருங்குவதைப் பார்த்து மேலும் கொஞ்சம் அதிர்ந்தான்.
"இங்க பாருங்க டாக்டர் நீனா, நீங்க புரோட்டோகாலை மீறுறீங்க... செயற்கை மனிதர் சிறப்பு விதி 2, பிரிவு 'ஆ' படி நான் இந்த கிரகத்தின் ஆளுநர்க்கு மட்டுமே முழுதாகக் கட்டுப்பட வேண்டியவன், என் மேல நீங்க கை-"
VOCÊ ESTÁ LENDO
கலாவிக் (Kalavik)
Ficção CientíficaA physicist finds himself in an alien planet, 2.5 million light-years away and 340 years into the future apart, in a cyborg's body! He learns that his peril is not entirely an accident and that he has some chance of saving our planet earth from bein...