விழி வழி விழுந்து நசுங்கிய காரணங்களுக்கு விழி நீர் என்ற பெயரோ!!
கண்டு கொண்ட மாற்றங்கள்...
எதிர்பார்ப்பு தந்த ஏமாற்றங்கள்...
ஆயிரம் ஆயிரம் மாறுதல்கள்...
இதயம் மட்டுமே அறிந்த நெருங்கிய மௌனங்கள்...
இன்றி அமையா தனிமைகள்...
பெயர் கொள்ளா கோபங்கள்...
சொல்ல முடியா சங்கடங்கள்...
வலியை உமிழ்ந்து தள்ளும் அகம்பாவங்கள்...
முடிவு இல்லா தோல்விகள்...
வேஷங்கள் தந்து சென்ற காயங்கள்...
அடடா எத்தனை எத்தனை காரணங்கள்???
அத்தனையையும் தூக்கி எறிய விழிநீர் தான் வரமோ!!!
எத்தனை பெரிய அதிசயம்... ஒரு சொட்டு ஒரே ஓர் சொட்டு கண்ணீர் நீயே... என் மனத்தை மெல்ல மெல்ல தேற்றுகிறாயடி...
அன்பே!! நீ மட்டுமே என் உற்ற தோழி ஆன கதை இது தானடி...