அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அந்த அதிகாலை வேளையில் பரபரப்புடன் அவளை தயார்ப்படுத்தி கொண்டிருந்தனர் அழகு கலை நிபுணர்கள் அவளை. அவள் முகமோ சின்ன இதழ் விரிப்பில் விரிந்திருந்தது அவள் நமது கதை நாயகி வைஷாலி .
அவள் ஒரு புறம் தயார் ஆகிகொண்டிருக்க அந்த மண்டபத்தில் அந்த நேரம் அத்தனை அழகாய் மிளிர்ந்தது. ஆம் இன்று நமது நாயகி வைஷாலி திருமணம் .
மண்டபம் முழுவதும் கல்யாண பரபரப்பில் இருக்க ஒருவன் மட்டும் கடைசி நொடியாவது இந்த திருமணம் நின்று விடாதா என்ற எதிர்பார்ப்பில் இருக்க வாய்ப்பு இல்லை என்பதற்கு ஏற்ப அய்யர் அவனை அழைக்க நண்பர்கள் அவனை அழைத்து சென்றனர் மணமேடைக்கு. ஆம் அவன் தான் இந்த கதையின் நாயகன் ரித்விக்.
கல்யாணத்தில் சிறிதும் விருப்பம் இல்லை அவனுக்கு. காரணம் என்று சொல்லிக்கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை. ரித்விக்குக்கு தற்போது கல்யாணத்தில் விருப்பம் இல்லை. அதுவே வைஷுவை வெறுக்க முழு காரணம்..
இவன் கடமையே என தயாராக அவளோ தன்னவன் இன்று தனக்கு உரிமையாக போகிறேன் என்ற கனவில் ஆசையாக தயாராகினாள்.
நாம் நினைத்தது எல்லாம் நடந்து விட்டாள் கடவுள் என்ற ஒருவன் இல்லையே. முகுர்த்த நேரம் வர மாப்பிளையை அழைத்து வர சொன்னார்கள்..
ரித்விக் கோவமாக வந்து மணமேடையில் அமர்ந்தான். ஐயர் மந்திரம் சொல்ல ரித்வி கடமையாக அதை சொல்லிக்கொண்டிருந்தான். ஐயர் மணப்பெண்ணை அழைக்க வைஷு அவள் தோழிகளுடன் வந்தாள்.
வெக்கத்தில் சிவந்த முகத்துடன் அரக்கு நிற பட்டுடுத்தி பொன் நகைகளின் ஜொலிப்புக்கு நிகராக அவளும் ஜொலிக்க அழகாக வந்தாள். வைஷு கண்களில் காதலுடன் ரித்வியை காண அவனோ இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தான்..
வைஷு " அவன் முகம் பார்க்க நெஞ்சில் ஒரு சொல்ல முடியாத பயம் உருவாக அத்துடனே அவனருகிள் அமர வைக்க பட்டாள் "