1906ம் ஆண்டு வான்கூவர் அருகே மிக மோசமான வானிலை காரணமாக தி எஸ்எஸ் வாலேன்சியா கப்பல் கடலில் மூழ்கியது. அந்த கப்பலில் இருந்த 108 பேரில் 37 பேர் உயிர்காக்கும் படகுகள் மூலமாக உயிர் பிழைத்தாலும், அந்த பகுதியில் இறந்தவர்களின் ஆவியும், அந்த கப்பலும் அவ்வப்போது தோன்றி மறைவதாக நேரில் பார்த்த அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கப்பல் மூழ்கி பல தசாப்தங்கள் கடந்தாலும், அந்த பகுதி வழியாக செல்வதற்கு மீனவர்கள் அச்சப்படுவதற்கு காரணம், அங்கு மனித எலும்பு கூடுகளும், கப்பலும் தோன்றுவதுதான் காரணமாக தெரிவிக்கின்றனர்.
1947ம் ஆண்டு மலாக்கா ஜலசந்தியை கடக்க முயன்ற இரண்டு கப்பல்களில் தி ஓரங் மேடன் என்ற கப்பலில் இருந்தவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அந்த கப்பலிருந்து மீட்பு படையினருக்கு உதவி கோரி தகவல் கொடுத்தவர், I die என்று சொல்லியதுதான் கடைசி வார்த்தை. உடனடியாக, அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் கப்பலில் சென்று ஆய்வு செய்தபோது, அதிலிருந்த அனைவரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததுடன், அவர்களது முகம் மிக கோரமான முறையிலும், அச்சம் தரும் முக பாவனைகளுடன் இறந்து கிடந்தது கண்டு மீட்புக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக, அந்த கப்பலில் இருந்த நாய்களும் அவ்வாறே இருந்தன. ஆனால், கைவிடப்பட்ட நிலையில் இருந்த கப்பல் வெடித்து சிதறியது. இது ஏலியன் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகளின் கைவரிசையாக இருக்கக்கூடும் என்று இன்று வரை நம்பப்படுகிறது.
பெர்முடா முக்கோணத்திற்கு அருகிலுள்ள கேப் ஹேட்டராஸ் என்ற இடமும் கப்பல் ஓட்டிகளுக்கு மிக அபாயகரமான இடமாக இருந்து வருகிறது. 1921ம் ஆண்டு அமெரிக்காவின் வடக்கு கரோலினா கடல் பகுதியில் ஒரு கப்பல் பயங்கர சப்தத்துடன் தீப்பிடித்தது. இந்த விஷயம் உடனடியாக அமெரிக்க கடலோர காவல் படைக்கு தெரியவந்தது. உடனடியாக கப்பலில் சென்று மீட்புப்பணியில் ஈடுபட முயன்றனர். ஆனால், ஆச்சரியமளிக்கும் விதததில், கப்பலில் இருந்தவர்கள் மாயமாகியிருந்தனர். விசாணையின்போது, அதே பகுதியில் சென்ற வேறு சில கப்பல்களும் அப்போது மர்மமான முறையில் மாயமாகி இருப்பது அதிர்ச்சியை தந்தது. இது பெர்முடா முக்கோணத்தின் மர்மங்களில் சேர்த்து, கேஸை முடித்துக்கொள்ள வேண்டியதுதான் என்று அமெரிக்க கடலோர காவல்படை முடிவு செய்தது.