தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
49 parts Complete காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா?
தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத்து ஆண்டுகளில், விதி அவனோடு விளையாடி, அவனது குண நலனையே தலைகிழ்ழாய் மாற்றி விட்டிருந்தது. அவன் மாறாமல் அப்படியேதான் இருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அவனைத் தேடி வருகிறாள் நாயகி. அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அவர்களுடன் நல்ல முறையில் விளையாட காத்திருந்த விதி, அவர்களை எப்படி இணைத்து வைக்கப் போகிறது?