வணக்கம், ஆர்த்தி. உங்களுடைய முதல் கதையைப் படித்தேன். ரொம்ப நாளுக்குப் பிறகு wattpad-ல ஒரு நல்ல தமிழ் கதையைப் படித்த திருப்தி கிடைத்தது. உங்களின் 'என் உயிரானவனே' கதை எதார்த்தைத்தை எடுத்துரைக்கும் வகையிலும் மிகவும் நேர்த்தியான தமிழிலும் அர்புதமாக வெளிவந்துள்ளது. வாழ்த்துகள். மீரா போன்ற பெண் பாத்திரம் தைரியமான பெண்மணியாக கதையின் இறுதி வரை வளம் வர விட்டதற்கு உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களின் எழுத்துகள் மூலம் மனநிறைவை வழங்கும் வித்தையை என்றும் நிறுத்திவிடாதீர்கள். நிறைய பேருக்கு அது தேவையாய் இருக்கிறது. நீங்கள் மேன்மேலும் வாழ்வில் சிறக்க என் வாழ்த்துகள்.