Angel_RG
இமைகாமல் பார்தேன் இமைக்கும் உன் இமைகளை பற்கள் விளங்கா சிரிப்பு பற்றியது என்னுள் படபடப்பு பொன்னில் இல்லா மதிப்பு உன் சிரிப்பில் தந்தது வியப்பு இமைக்கும் நொடியிலும் இம்சிக்கின்றது உன் ஞாபகம் நீ வாய் பேசுவதை நான் யாசிப்பதனாலா பேச மறுக்கின்றாய்- நானே சுவாசிக்கவே மறக்கின்றேன் மௌண விழி மொழியிலாவது பேசு ஏய்! பேசு ஏன் அசடாய் முழிக்கின்றாய் பேச மாட்டாய்... நீ பேசவே மாட்டாய்... நீயா அசடு இல்லை... மாலை தாங்கிய படத்தின் முன் நின்று பேசச்சொல்லும் நான் தான் அசடு!!! #772