எப்போதும் நமக்கு கீழ் இருப்பவர்களைத்தான் பார்த்து நாம் நமது நிலையை எண்ணி கடவுளுக்கு நன்றி கூற வேண்டும் என்று நான் நினைப்பேன். அதைதே இங்கு ஆதிரா வருணுக்கு டெய்லி டாஸ்க்காக கூறியது சூப்பராக இருந்தது.ஒரு சிலருக்கு பணம் இருக்கும் மற்ற எதுவும் இருக்காது. ஆனால் சிலருக்கு எல்லாமே இருந்தும் பணமிருக்காது. இரண்டுமே கடினமான விடங்கள்தான் என்பதை மிகவும் சிம்பிளாக கூறியிருப்பார். அதிலும் பெரிய கஷ்டம் சிறிய கஷ்டம் என்று எதுவுமில்லை. கஷ்டங்கள் எல்லாமே கஷ்டங்கள்தான் என்று கூறியவை எல்லாம், எழுத்தாளினி ஒரு தத்துவ ஞானியோ என்று எண்ணத்தோன்றுகின்றது.
இந்த கதை எதற்காக மைனா என்று கேட்டேன். அதற்கு மைனா கூறிய பதில் “ஆங்கில வாட்பெட்டில், டாக்டர் - நடிகன், டாக்டர் - பேசண்ட், நடிகன் - டான்ஸ் அஸிஸ்டண்ட் இவை எல்லாம் cliche (சுட்ட வடையை மறுபடி மறுபடி சுடுதற்கு க்ளிஷே என்று பெயர்). இப்படியான கதை எழுத கூடாது என்று நினைத்தேன். இருந்தாலும் எழுதிப்பார்க்க ஆசை. ஆசை யாரை விட்டது” என்றார். மேலும்
“ நிஜத்தில் டாக்டர் - பேசண்ட் காதலை என்னால் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள முடியாது. டாக்டர் - பேசண்ட் உறவானது Not Love. Kindness and trust தான் அவர்களுக்குள் இருக்கும்” என்றும் கூறினார். இதே உடன்பாட்டில்தான் நான் இருக்கின்றேனா என்றால் கண்டிப்பாக இல்லை என்றே கூறுவேன். காதல் எப்போது யாரை போட்டு தாக்கும் என்று கூற முடியாதல்லவா. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும்.
ஆனால் கதை cliche வாக இருந்தாலும் கதையின் முடிவு ஒரு outstanding. அதற்காக ஒரு standing applause கொடுக்கலாம்.
சாதாரண ஒரு முடிவு கொண்ட கதையாக இருந்திருந்தால் கண்டிப்பாக என்னிடம் இருந்து கதையின் முடிவுக்காக பல கேள்விகள் வந்திருக்கும். ஆனால் ஒரு extraordinary முடிவு கொடுத்து அதில் இருந்து தப்பித்து கொண்டீர்கள்.
கடைசியாக “ யாதிரா” ஆழமாக படிக்க நினைக்கும் எல்லோருக்கும் ஒரு வரப்பிரசாதம்.
அடிக்கடி மைனாவுக்கு பேய் பிடிக்க கடவுளை வேண்டியவனாக….ஹஹா அப்போதான் இப்படி ஒரு முழு கதை நமக்கு எல்லோருக்கும் கிடைக்கும்..
கொசுறு தகவல்.. மைனா இந்த கதையை மூனு நாள்ள எழுதினாங்களாம். நான் இரண்டு நாள்ள ரிவ்யூ போட்டது என்னோட பெர்சனல் பெஸ்ட்