Kavi_Rasi
கலியுகத்தில் மீண்டும் ஒரு
புத்தாண்டு பிறக்க இருக்கிறது
ஆம் இதோ இன்னும் சில மணி நேரத்தில் ..........
ஒவ்வோர் ஆண்டிலும் சில நல்ல நிகழ்ச்சிகள்
சில அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகள் உண்டு
நல்ல நிகழ்ச்சிகளை மனதில்
பூட்டி வைப்போம் நினைவுகளாய்
தீயவற்றை வேரோடு மனதை விட்டு நீக்கி
மறந்திடுவோம் .....
கடந்த ஆண்டின் நல்லவற்றை
புத்தாண்டிற்கு முதலீட்டாய் வைத்து
முன்னேறுவோம் .....
வாழ்க்கையாம் இமயத்தின் உச்சியை
தொட்டுவிட வெற்றிக்கொடி நாட்ட
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
என்ற 'திரிகடுகம்' துணையுடன்
உண்மையால் உயர்வோம்
உண்மையே இறைவன்
2020 எமக்கு அருள் புரிந்திடுவாய்
நல்ல ஆண்டாய்.....
~kavi_rasi~