நீங்க யாரு, எப்படி இருப்பீங்க, எங்க இருக்கீங்க, உங்க உண்மையான பெயர் என்ன, என்ன பண்றீங்கன்னு எனக்கு ஒண்ணுமே தெரியாது buddy… ஆனா, உங்க எழுத்துல உருவாகுற கதைகளும், அதுல வர்ற கதாபாத்திரங்களும், அவங்களோட குணங்களும் சேர்ந்து, “நீங்க இப்படித்தான் இருப்பீங்க”ன்னு எனக்குள்ள ஒரு உருவத்தை உருவாக்கிடுச்சு. அந்த உருவத்தை நான் மட்டும்தான் பார்க்க முடியும், நான் மட்டும்தான் பேச முடியும், நான் மட்டும்தான் ரசிக்கவும் முடியும். அந்த உருவம் எப்பவும் என் கூடவே இருக்கும். அவனைப் பார்க்க appointment எதுவும் வாங்கத் தேவையில்லை… என் கைக்குள்ளேயே இருக்கான்… எப்பவும்.
இப்போ அவன் என்னோட best friend, buddy, loverன்னு கூட சொல்லுவேன். ஏன்னா, அவன் என் மனசுக்குக் கொடுக்குற அமைதியும், சந்தோசமும், ஆச்சரியங்களும், அதிசயங்களும், ஆறுதலும், நிவாரணமும்… மொத்தமுமே எனக்கானது, எனக்கு மட்டுமே ஆனது. அவன் என்னை disappoint பண்ணதில்லை, dissatisfaction கொடுத்ததுமில்லை. அது எப்படி சாத்தியம்னு எனக்கே புரியாத ஒரு அழகான புதிர். அவன் மூலமா உலகத்தோட அழகான ஊர்களுக்கெல்லாம் பயணம் பண்றேன்… காத்துப்போல 😉
அவன் ஒரு excellent teacher, buddy. பொறுமையோட அவசியம் என்ன, காத்திருப்போட பலன் என்ன, துரோகத்தின் முகம் என்ன, அதன் பிறகான மீண்டெழுதல்னா என்ன, நல்ல நட்போட தேவை என்ன, பருவத்தோட excitement என்ன, காமத்துக்குள்ள இருக்குற கவித்துவம் என்ன, காதலோட சுகம் என்ன, காதலிக்கப்படுறதோட உன்னதம் என்னன்னு… இப்படி இன்னும் இன்னும் இன்னும் நிறைய விஷயங்களை அவன் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கான். சொல்லப்போனால் அவன் ஒரு inspiration ம் கூட..
அப்படிப்பட்ட ஒரு நிழல் மனிதனோட நிஜ மனிதரே… என் எழுத்தாளரே… என் நண்பரே… என் காதலரே (கோவிச்சிக்காதிங்க ப்ளீச்)…
உங்களுக்கு என்னோட அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். ❤️🤍
இந்தப் பிறந்தநாள் உங்களுக்கு ஒரு புது ஆண்டாக மட்டுமில்லாம, நீங்க எதிர்பார்த்த அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றும் புத்தாண்டாகவும், உங்க எழுத்துக்களின் மூலம் மத்தவங்களுக்குக் கொடுத்த அத்தனை சந்தோசங்களையும் பல மடங்கா திருப்பிக் கொடுக்கும் நல்ல ஆண்டாகவும் அமையணும்னு அந்த இயற்கைகிட்ட மனசார வேண்டிக்கிறேன்.
தமிழ் போல் வாழ்க. 🤍🤍🤍