Happy new year makkale...
வழக்கமா டிசம்பர் 31 வந்து நான் கதையெழுத ஆரம்பிச்ச நாள் ன்னு அறுத்துட்டு இருப்பேன்,
ஆனா இந்த வருஷம் அப்படி எழுத வாய்ப்பில்ல. குறைஞ்சது ஆறு மாதங்களாவது ஆகும்.
கதை எழுதலாம் ன்னு பார்த்தேன், ஆனா கல்விசார்ந்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு.
கூடவே, நான் கொஞ்சம் புதுப்பொண்ணு vibe ல இருக்கேன்,
Yes மக்களே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் எனக்குத் திருமணம் ஆகிருச்சு. எனக்குக் கிடைத்த கணவர் பொறுமை,அன்பு, பண்பு, காதல் ன்னு எனக்குப் பிடிச்ச எல்லா குணங்களும் நிறைஞ்சு எனக்காகவே பட்டிடிங்கரிங் பார்த்து அனுப்பி வச்ச மாதிரி இருப்பதால் நான் நலம்... நலம்...
நீங்க எல்லாரும் நலம்ன்னு நம்புறேன்...
2025 எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அதுக்காக அங்க அடிவாங்கல ன்னு அர்த்தம் இல்ல... குரூப் 1 போஸ்ட் இன்டர்வியூ வரை போய் புட்டுக்கிச்சு. இருந்தாலும் எல்லாம் பாடங்களே,
என் கணவரை விட சிறப்பான விஷயத்தை எந்த வருஷமும் கொடுத்துர முடியாது. அதுக்காகவே நன்றி 2025.
2025 கதை கணக்குக்கு எனக்காக வந்தவனே லிஸ்ட்ல இருக்கு❤️.
ஆறு மாசத்துல நான் முடிக்க நினைச்ச விஷயத்தை முடிச்சுட்டா இந்த வருட இறுதியில் உங்களுக்காக மூன்று கதைகள் காத்திருக்கின்றன என்பதையும் சொல்லிக்கொண்டு....
Once again happy new year makkale , இந்த வருடம் நம் எல்லாருக்கும் நல்ல நிமிடங்களை அதிகம் கொடுக்கட்டும்.