முகநூலில் படித்தது...
கதை திருட்டைப்பற்றி... அதில் இடம்பெற்ற சில வரிகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. முழு பதிவை இந்த லிங்கில் பார்க்கவும்
https://m.facebook.com/story.php?story_fbid=10157124175142011&id=566052010
எங்களின் தொழில், எழுதுவது. என் தந்தையைப் போல் என் தொழிலும் எழுத்தைச் சார்ந்ததே. ஒரு சிறிய படம் எடுப்பதற்கு மிகப்பெரிய பொருட்செலவு தேவைப்படுகிறது, அளவுக்கு மீறின கடின உழைப்பு தேவைபடுகிறது, உணவு உண்பதற்கும், தூங்குவதற்கும் நேரமில்லாமல் ஓட வேண்டியிருக்கிறது. இத்தனை கடினங்களை மீறி ஒரு படைப்பு வெளியே வர கடைசி நிமிடங்களில் எக்கச்சக்க போராட்டங்களை கடக்க வேண்டியிருக்கிறது. அத்தனையும் மீறி வெளிவர ஒரே நாளில் பைரஸி. எத்தனையோ வடிவங்களில் உழைப்பு, வெற்றி வேண்டுமென்ற வெறி, அக்கறை, ஆசை, முயற்சி பைரஸியால் கற்பழிக்கப்படுகிறது. மிகக்கொடுரமான முறையில் கொலை செய்யப்படுகிறது. படைப்பாளியின் வயிற்றில் ஏறி மிதித்து காலூன்றி நின்று கொக்கறித்து கொல்லும் முறையாகப் படுகிறது. இந்தத் தவறை மறந்தும் செய்துவிடக்கூடாது என்று திருட்டு வீசீடிக்கள், டவுன்லோட்கள், mp3யில் பாடல்கள் என்று அனைத்தையும் புறக்கனித்துவிட்டேன். என்னைச் சார்ந்த எனது நண்பர்களுக்கு இதைக் கோபத்துடனும், அன்பாகவும் அறிவுரைத்தபடியே இருக்கிறேன். அனைத்து படைப்புகளுக்கும் இது பொருந்தும். இன்னும் அதிகமாக பைரேட்டட் pdfகளாக வலம்வந்து கொண்டுதான் இருக்கிறது. இது மிகப்பெரிய அநீதி. த்ரோகச்செயல். இதற்கு வக்காளத்து வாங்கும் கூட்டமும் இருக்கிறது என்பதுதான் இன்னும் வேதனையாக இருக்கிறது. எழுத்தை தொழிலாக கொண்டது பிழை என்று சொன்னது, உங்ளுடன் பயனித்த எழுத்தாளனை தோள் உதறி தரைதள்ளிவிட்டது போல் தோன்றியது. உங்கள் நண்பனாக வலம் வந்தவனை முன்னால் அனுப்பிவிட்டு முதுகில் சேறு அடிக்கும் அவலம்.
படைப்பின் நோக்கம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பது மிகச்சரி. அதனால் கலைகளை தொழிலாகக் கொள்ளலாகாதா? நான் ஒரு எழுத்தாளன், கவிதை எழுதுபவன் என்று இறுமாப்புடன் மார்த்தட்டிக் கொள்ளவே முடியாதா? உண்ணும் உணவுத்தட்டைப் பிடுங்கி எறிந்தால்? நண்பர்களே, தோழிகளே திருடுவது சௌகர்யம் என்றால் இழந்தவன் சாபம் மிகச் சரியே.