2001.
இரவு 12 மணி.
அன்று அவளது பிறந்தநாள்.
தங்களின் ஒரே மகள் ஆதலால், அவளுக்கு பிடித்தவாறு எல்லா ஏற்பாடுகளையும் செய்து அவளது நெருங்கிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்திருந்தனர் அவளது பெற்றோர்.
அங்கே குழுமியிருந்தவர்கள் முன்னிலையில் கேக் வெட்டி, அனைவருக்கும் ஊட்டி மகிழ்ந்தாள் அந்த இளம்பெண் ..
இல்லை.. மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக் கொண்டாள்.
பரிசினை வழங்கிவிட்டு நண்பர்கள் பிரிந்து செல்ல, தனது அறைக்கதவை மூடிக்கொண்டாள்.எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் அவள் , அவளது பிறந்தநாள் அன்று பொலிவிழந்து காணப்பட்டாள்.
அவளது அலைபேசி சிணுங்க, ஆவலோடு கையிலெடுத்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவள் எதிர்பார்த்த அந்த நபரைத் தவிர அனைவரும் வாழ்த்து கூறியிருந்தனர்.
எரிச்சலுடன் அலைபேசியை மெத்தையில் எரிந்துவிட்டு, ஜன்னல் வழியே பார்க்க, சுவர் ஏறி குதித்து காதல் செய்யும் அவளது ரோமியோவை அங்கு காணவில்லை.
அன்று நடந்தவற்றை மீண்டும் ஒருமுறை எண்ணத்தில் ஓடவிட்டுப் பார்த்தாள்.
அன்று கல்லூரியில் நுழைந்ததும் அவள் கண்ட காட்சி அவளைப் பதறவைத்தது.
தனது காதலன் மற்றொரு பெண்ணுடன் நெருங்கி நின்று பேசிக்கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது எந்தப் பெண் தான் அமைதியாக இருப்பாள்?
அவளைப் பார்த்ததும்,அவன் எந்தவொரு பதட்டமும் இல்லாமல் அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தான்.
அன்று முழுவதும் அவளிடம் பேசுவதை அவன் தவிர்த்தான்.அவளோ "தான் என்ன தவறு செய்ததினால் இவன் இவ்வாறு நடந்து கொள்கிறான்?",என மனதிற்குள் கேள்வி எழுப்பிக் கொண்டாள்.
வகுப்புகள் முடிவடைந்து,அவன் நண்பர்களுடன் நின்றுகொண்டிருக்க, அவனிடம் பேச முயன்றாள். அவனோ எரிச்சலடைந்தான்.எப்பொழுதும் மாய வார்த்தைகள் வீசி மயங்கச் செய்பவன், அன்று "தேவையில்லாமல் தொல்லை செய்யாதே" என்று கடிந்தான்.
YOU ARE READING
கூற்றுவன்
Horrorஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் அமைதியை குலைக்கும் வண்ணம் தொடர்ந்து நடக்கும் மர்மக் கொலைகள். அதன் பிண்ணனி என்ன? யார் இந்த கூற்றுவன்? எதற்காக இவற்றை செய்கிறான்? விடையைக் கண்டறிய என்னுடன் பயணியுங்கள்.