அதிசய இயற்கை

161 6 17
                                    

எம்மை  துயிலெழுப்பும் சூரியனே
எட்டிப் பார்ப்பது ஏனோ?
எழும்ப மறுத்த உன்னை உன் தாய்
அடிக்க துரத்துகிறாளா?

அழகாய் மின்னியே
ஆகாயத்தில் ஆட்டம் செய்யும் உடுக்களே
வெண்மதி உனை பாராது
வெட்கப்படுகிறாளா? இல்லை
வேண்டாம் என்கிறாளா?

யாரை பிரிந்தாயென நீ
கண்ணீர் விடுகிறாய் கருமுகிழே?
யாசகம் கேட்டு பெற்ற உன்
காதல் கை நழுவி போனதுவா?

மலரே ஏன் மலராதிருக்கிறாய்? உன்
மன்மத வண்டுடன் ஊடலா?
மனங்கவர்  உன் கள்வன் இதோ
மண்டியிடுகிறான் முன்னே
மலர்ந்திடு மலரே!
உன் இதழ்கள் விரித்து என் இதழினை விரித்திடு!!...

Vous avez atteint le dernier des chapitres publiés.

⏰ Dernière mise à jour : Feb 01, 2021 ⏰

Ajoutez cette histoire à votre Bibliothèque pour être informé des nouveaux chapitres !

அதிசய இயற்கை Où les histoires vivent. Découvrez maintenant