எனக்கே புரியா என் மனதின் மொழிகளை உனக்கு புரிய வைப்பேனா
பெண்களை வெறுக்கும் என் மனதிலே உன்னை நான் சுமப்பேனா
இல்லை என்று சொல்லும் அளவிற்கு காதலை நான் அள்ளித் தருவேனா
காலம் ஆடும் பொம்மலாட்டத்தில் ஆடும் பொம்மைகளா நாம்
இல்லை காதலில் ஒரு அத்தியாயத்தை படைக்கும் காவியங்களா நாம்வருண் சுழல் நாற்காலியில் தோரணையாக அமர்ந்திருந்தான். அவன் முன்னே இருந்த டேபிளின் மீது அவள் ஐடியை தூக்கிப் போட்டான்.
அவள் ஐடியையும் அவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்த சமயம் வருண் நிதானமாக அவள் அருகில் சென்றான். பயதிலும், படபடப்பிலும் தன் கண்களை விரித்து விழித்து அவனை அவள் பார்த்தது அவனுள் ஏதோ செய்ய உலகமே ஒரு நிமிடம் நின்று விட்டதாய் உணர்ந்தான். தன் தலையை மறுபுறம் திருப்பி 'உப்' என்று ஒரு பெரும் காற்றை வெளியே விட்டபடி ஒரு நிமிடம் தனக்குள் என்ன நடந்தது என புரியாமல் யோசித்துக் கொண்டு நின்றான். அவன் திரும்புவதற்குள் அவள் அவளுடைய ஐடியை எடுக்க முயன்றாள்.
பின் நடப்புக்கு திரும்பி கோபமுடன் அவளை நோக்கினான்.
"காலையில் கோவிலில் பவுண்டரிக்கு என்ன பெயர் சூட்டுனீங்க ரெண்டு பேரும்.. ம்…" என யோசிப்பது போல தன் கண்களை மூடி நெற்றியை சுருக்கி தன் இரண்டு விரல்களால் அதை நீவியபடி நின்றிருந்தான்.
அவன் பார்ப்பதற்குள் அவள் கையை வெடுக்கென்று எடுத்துக்கொண்டாள் ஆனால் ஐடியை தான் அவளால் எடுக்க இயலவில்லை.
"ஆ… ஞாபகம் வந்துவிட்டது மண்டையன் அதனே சொன்னிங்க" என்றான் இறுகிய முகத்துடன். இப்பொழுது கண்களை இறுக மூடிக் கொள்வது நிலாவின் முறையானது.
வருண் : "அப்புறம் கேண்டீன்ல இன்னொரு பெரும் அழகா சூட்டுனீங்களே…" இந்தப் பெயரும் அவனுக்கு சட்டென ஞாபகத்திற்கு வரவில்லை. நிலாவிடமே திருப்பி அந்த பெயர் என்னவென்று கேட்டான்.
YOU ARE READING
இதுதான் காதலா [முடிவுற்றது]
Romanceகாதல் என்றால் என்னவென்று தெரியாமலே அதன்மீது வெறுப்பும் கோவமும் கொண்ட இருவர் விதிவசத்தால் இணைந்து உணரும் ஒரு அழகிய உணர்வு. வாருங்கள் நாமும் இவர்களுடன் சேர்ந்து இதை உணருவோம்...