🥰2🥰

419 15 3
                                    

 புதிதாய் ஒரு உணர்வு 
   என்னை பூதம் போல 
     ஆட்டிப்படைக்கிறது…..
         உன் விழிகள் சொன்ன மொழிகளை
             புரிந்துகொள்ள பயிற்சி தருவாயா…..

 தன் எண்ணங்களை திசைதிருப்ப தன் தலையை இருபுறமும் ஆக சிலுப்பி விட்டு "உஸ்…" என்ற ஒரு பெரும் காற்றை வாய்வழியே வெளியே விட்டவாறு கோயிலினுள் சென்ற வருண் வினையின் அருகில் சென்று நின்றான்.

 வினய் : "என்னடா வெளியில…" என மெல்லிய குரலில் வருணுக்கு மட்டும் கேட்குமாறு வினவினான்.

 வருண் ஒன்றும் இல்லை என்னும் விதமாக கண்ணடித்து தோல்களை குலுக்கினான்.

 அங்கிருந்து இருவரும் ஒரு இடத்திற்குச் சென்றனர். பாதிவழியில் வினய் ஒரு வேலை காரணமாக இறங்கிக் கொண்டான்.

*****************************************************

 அனுவும், நிலாவும் நிலாவின் மஞ்சள் கலர் வெஸ்பாவில் சென்றனர். கோவிலிலே நேரமாகிவிட்டதால் கல்லூரியின் உள்ளே செல்லும் பொழுது ஐடி கார்டை கண்டிப்பாக அனிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதாலும், செல்லும் வழியில் ஐடி கார்டை கழுத்தில் அணிந்து இருப்பது தவறு என்பதாலும், எடுக்க இலகுவாக இருக்க வேண்டும் என்று நிலா தன் ஐடியை கையில் வைத்திருந்தாள். ஆனால் அனு இந்த வேலையே வேண்டாம் என்று ஒரேயடியாக கழுத்திலேயே போட்டுக்கொண்டாள். அந்த வண்டி பாதிவழியில் காலை வார வண்டியின் வேகம் குறைய தொடங்கியது. பின்னிருந்து வந்த ஹோண்டா சிட்டி கார் தெரியாமல் இவர்களை லேசாக இடித்து விட்டது.

 இந்த வண்டி நிலாவின் மிகுந்த விருப்பத்திற்கு உரியது. அது அவள் அப்பா, அம்மா, அனுவிற்கு பிறகு தொடைக்க கூட யாரையும் விட மாட்டாள். ஒருத்தன் இடித்தவுடன் கோபம் பொத்துக் கொண்டு வர அந்த காரின் அருகில் சென்று கண்ணாடியை தட்டி இறக்க சொன்னாள். இறக்கிய பின்பு தான் தெரிந்தது அது தன்னை கோவிலில் இடித்தவன் என்று.

 அவளைப் பார்த்ததும் தான் அணிந்திருந்த கூலர்ஸைக் கழட்டினான். அவனை கண்டதும் மேலும் கோபம் அதிகமாக நிலா அவனை பார்த்து "ஏய் மிஸ்டர் என்ன இன்னிக்கி எங்களையே குறிவைத்து இடிக்கணும்னு நினைச்சுட்டு வரியா… கருப்பு கண்ணாடி போட்டிருந்தா முன்னாடி போறவங்க கண்ணுக்கு தெரியாதா…" என அவனை வாங்கு வாங்கு என்று வாங்கினாள்.

இதுதான் காதலா [முடிவுற்றது]Onde histórias criam vida. Descubra agora