கதையும் அதன் கதையும்

29 5 4
                                    

நான் என்றும் கூறுவது போல காதல் என்றுமே அலதியானது அவசியமானது பருவத்தின் வாசலில்  மழையை ரசிக்கவோ ஒரு இசையில் முழ்கி தொலைந்து போகவோ காதல் ஒன்று தேவைப்படுகிறது....

பொதுவாக எனது காதல் கதையின் கருவில் சிறு பூக்கள் மலர்ந்து இருக்கும் சிறு கண்ணிர் நிரம்பியிருக்கும்.ஆனால்,இந்த கதை முற்றிலும் மாறுபட்டது.

இது அதன் காதல் கதையை உங்களுக்கு சொல்வது அல்ல உங்களுள் உள்ள காதலை உங்களுக்குள் உணர செய்வது.

குறும்புகர பெண் வேலையில்லாத ஆண் இவர்கள் காதல் என்று VDK Rashmikha அட்டைபடம் போட்டு வழக்கமான கதை சொல்லி மற்றவர்கள் போல அலுப்பு தட்ட செய்யாமல் முதல் முறையாக NON-FICTION கதையை கொஞ்சம் கற்பனை கலந்து கதை சொல்ல தொடங்குகின்றேன்

இந்த கதையும் கதையில் வரும் கதபாத்திரங்களையும் நேரில் பார்த்து பழகியவன் என்பதலோ என்னவோ இந்த கதையை எழுதும் போது எல்லாம் எழுதுகோலில் சக்கரை பாகூவின் இனிப்பு கூடிக்கொள்கிறது...

இப்படி ஒருத்தி இருப்பாளா...???நம்முள் உள்ள காதலை எல்லாம் தனதாக்கிகொள்வாள..??இரு விழியால் கவர்ந்து நம்மை செல்லாவாளா..?? என்று தினம் தினம் புலம்ப வைத்த....

அவளுக்காக:

உன்னழகை விளித்திட
உள்ளத்தை உழுதேன் !
வித்திட்டவை பலனின்றி
விரயமானது எழுத்துகள் !
விளையாத நிலம்போல
விழலானது நெஞ்சமும் !

கற்பனைகள் எழுந்தென்ன
கவியெழுத இயலவில்லை !
சொற்கள்பல தெரிந்தென்ன
சொல்லாட்சி முடியவில்லை !
சிந்தனைகள் பிறந்தென்ன
சிந்தையில் தங்கவில்லை !

கல்கியின் நாவல்களை
படித்தும் நினைவில்லை !
சாண்டில்யன் வரிகளும்
சமயத்தில் உதவவில்லை !
கவியரசின் சிந்தனைகள்
கடுகளவும் எனக்கில்லை !

அறிந்தவையும் மறந்தது
அரவமின்றிப் பறந்தது !
வடித்திட நினைத்ததும்
வடிகாலில் வெளியேறியது !
இதயத்தில் படிந்திருந்தது
பிரதியாக இங்குபதிவானது !

ரவிவர்மா ஓவியமவள்
ரசிகனுக்கு காவியமவள் !
நிகரில்லா நிலமகளவள்
நினைவில் நிலைத்தவள் !
ஒளிரும் பொற்குவியல்
ஒப்பில்லா பெண்மயில் !

அவளே நான் பார்த்த ரசித்த கதையின் நாயகி !

எனது கஃப்பச்சினோ காதலி.....!!!

#பாலா✒

Cappuccino kadhalWhere stories live. Discover now