மாந்தரே!
மறந்தீரோ உன்
மரணத்தை
மனம் போகும்
மயக்க பாதையிலே
மான் வேகத்தில் போகிறாய்..சிரித்து மகிழ்ந்த உன்
இராஜ்யத்தை விட்டு
கல்லறை எனும் புது மனைக்கு
செல்ல போகிறாய்
தயாரா???வீண் பேச்சுக்களில்
வாழ்க்கையை
வீணடித்த நீ - அதை
வளமாக்க மறந்து விட்டாய்அன்று உனை
புகழ்ந்து திரிந்தவர்கள்
இன்று உன்னை
புதைக்க பார்க்கிறார்கள்பினம் என்று
பெயர் பெற்று விட்டாயே
பணம் உனை
காப்பாற்றியதா?புரிந்து விட்டதா?
பிறருக்கு நீ வழங்கிய
புன்களுக்கு
பிரதிஉபகாரம் கிடைக்கிறதா?மானிடா!
மரணம் அது
உன் வாழ்க்கை பரீட்சையின்
பெறுபேறு....
புரிந்து கொள்
பண்பாய் நடந்து கொள்
கல்லறையை ஒரு பூ
காடாய் மாற்றிட....