நிலவாக நீ முகிலாக நான்..

9 0 0
                                    

முகிலாக நான், உனக்காய்
முன்வந்து தான், தேடுகிறேன்..
முகிலாய் ஓடுகிறேன்.. காற்று
முந்தி அடிக்கும் திசையில்..

முயன்றாவது.. இயன்றாவது..
முந்தி வந்தாவது.. உந்தன்
முழுமுகத்தை கண்டாவது..

முழுதாக தான் என் ஆசையை
முடிமுதல் அடிவரை முழுவதும்
மூடிமறைக்காமல் உன்னிடம்
முறையிட்டு.. உன் மலர்முகத்தை
முந்தி அடித்து என்றும் நானே
முதலில் பார்க்க முயன்றவரை
முயலும் இவனை காண
முகம்கொடுத்து பாராயோ..
மதிநிலவே..

நிலவாக நீ..  வருவாய் என
நிற்குமிவன் நிலைமைதனை
நிர்ணயம் செய்வது என்றும்
நீயன்றோ.. முழுநிலவே..

நின்மதிமுகத்தை பார்க்க
நில்லாது உன்னை துரத்தி
நிப்பாட்ட வழியின்றி உந்தன்
நிலையை கண்டுபிடித்து உன்
நிழலில் அழகாக தெரிய
நிர்ணயமாய் நிச்சயமாய் உன்
நிழலில் தெரிய வேண்டி..

நித்தம் உன்னுடன் பயணப்பட
நிபுணன் இவன்..  என்றும்
மழை தரும் மேகமாய்..
வானவில் தரும் முகிலாய்..
வளம் தரும் மாரியாய்..

மண்ணை வர துடிப்பது போல்..
நிலவே..  உன்னை காண
துடித்து..  உன்னை அடைய
அலைந்து.. உனக்காக..
உன்னால்.. உருமாறி..

வலம்வரும் மேகதூதனாய்
நான்.. என் நிலவாய்..
நீயிருக்க..

நிலவு நீயானால்..
நின்நிழலும் நானாவேன்..
முழுநிலவே..

© CG Kumaran

நிலா காதல்Where stories live. Discover now