பக்கம் 1அழகான ஒரு மாலை நேரம் என் கையில ஒரு கப் காஃபி...என் மனசுக்கு புடிச்சவர் பக்கத்துல....கொஞ்சம் அமைதி கொஞ்சம் சிரிப்பு நிறைய பேச்சு....
கேட்குறதுக்கே நல்லா இருக்குது இல்ல...எனக்கும் அப்புடிதான் இருக்கும் இதை பத்தி எப்ப யோசிச்சாலும்...
என் பேரு வான்மதி...நான் முனிசிபல் கமிஷ்னரா கோயம்பத்தூர்ல வேலை பாத்துட்டு இருக்குறேன்...
என்னோட வாழ்க்கையோட பக்கங்கள் தான் இன்னைக்கு உங்க முன்னாடி நான் சொல்லிட்டு இருக்குறேன்...சரி வாங்க பாக்கலாம்...
நான் சொன்ன மாதிரி என் பேரு வான்மதி ...என் வீட்டுல நான் அம்மா அப்பா அப்புறம் அண்ணா ஒரு நடுத்தரமான குடும்பம்...
என் அம்மா சீதாலஷ்மி... அப்பா ரெங்கநாதன்... அண்ணா ராஜேஷ்
நானும் என் அண்ணாவும் சின்னபுள்ளையில இருந்தே ஒன்னா இருந்ததது இல்ல...
எனக்கும் அண்ணாக்கும் வயசு வித்யாசம் ரொம்ப...அதுனால படிக்குறதுக்காக அண்ணா வெளில போய்ட்டாங்க....
நான் ஸ்கூல் படிக்கும்போதுல இருந்தே தனியா தான் வளர்ந்தேன் வீட்டுல...
சின்ன புள்ளையில இருந்து தனியா நான் வளர்ந்ததுனாலேயோ என்னவோ எனக்கு அண்ணானா ரொம்ப புடிக்கும்....
எங்க வீட்டுலன்னு இல்லங்க ரெண்டு பேரு வேலைக்கு போர எல்லா வீட்டுலையுமே குழந்தைங்கள அந்த அளவுக்கு கவணிக்க முடியாது....
நான் எல்லாம் ஸ்கூல் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா என் வீட்டுல யாரும் இருக்க மாட்டாங்க...நான் பக்கத்து வீட்டுல சாவி வாங்கி வீடு திறந்து நானா சாப்டுட்டு உக்காந்து இருப்பேன்...அம்மா அப்பா வர சாய்ங்கலாம் ஆறு மணி ஆகிடும்
அவுங்க வருற வரைக்கும் நான் உக்காந்து படிக்குறது எல்லாம் பாத்துட்டு இருப்பேன்....வந்ததுக்கு அப்புறமும் என்கிட்ட பேச அவுங்களுக்கு நேரம் இருக்காது...அம்மா சாப்பாடு பண்ணிட்டு படுத்துருவாங்க அப்பா அவரு வேலைய பாத்துட்டு இருப்பாரு...
ESTÁS LEYENDO
டைரியின் பக்கங்கள்
De Todoஇந்த டைரில நிறைய சுவாரசியமான நிகழ்வுகள் இருக்கு...ஒருசில நிகழ்வுகள் என் வாழ்க்கையில நடந்த உண்மை நிகழ்வுகளும் கூட ...ஒருசில நிகழ்வுகள் நான் பாத்து மத்தவங்க வாழ்க்கையில நடந்த நிகழ்வுகள் பொதுவா நம்ம டைரி எழுதுனா அதை யாரும் படிச்சிடக் கூடாதுன்னு யாருக...