ரகசியமாய் புன்னகையித்தால் 20❤️‍🔥

489 15 3
                                    

புன்னகை 20

ஜீவாவின் குறுஞ்செய்தியை பார்த்ததும் மேலே ஓடினாள் இதழினி . ஜீவா கைகளை கட்டிக்கொண்டு எங்கோ வெறித்துக்கொண்டிருந்தான். இனிக்கு தெரியும் அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று புன்னகையுடன் அவனை பின்னிருந்து அணைத்துக்கொண்டவள் "வீட்டுக்கு போகாம இங்க வந்து என்ன பண்ணுற மாமா"

ஜீவா - பரிதி எப்படி பேசிட்டான் பாரு செல்லம்மா, நா அவனை அப்படி நினைப்பனா??? என் அப்பா கேட்டிருந்தா நா பணம் குடுத்திருக்க மாட்டேனா என்று மனதில் வலியுடன் கூற அவன் முன் வந்து நின்றவள் அவன் கைகளை அழுந்த பற்றிக்கொண்டு "அவன் என்ன பேசுறோம்னு தெரியாம பேசிட்டான்"

ஜீவா - அவனால பணம் ஏற்பாடு பண்ண முடியாதுன்னு நினைக்கல, அவனும் எவ்ளோ நாள் தனியா சித்தப்பாவை சமாளிப்பான் நம்மளும் உதவிசெய்யலாம்னு நினைச்சேன்

இதழினி - நீ நெனச்சதுல தப்பில்ல அவன் அப்படி கேட்டதுலையும் தப்பில்லை என்றதும் ஜீவா அவளை முறைத்தான்

இதழினி - ஏற்கனவே சின்ன மாமா பொறுப்பில்லாம இருக்காரு, எப்பவும் யாரோட உதவி அவருக்கு தேவ பட்டுட்டே இருக்கு முன்ன அப்பா இப்போ நீ. இத்தனை நாள் எப்படியோ ஆனா இப்போ பரிதி காலேஜ் முடுச்சிட்டான் அவன் சொந்த கால்ல நிக்கனும்னு ஆசை படுறான் அவன் எப்பவுமே சொல்லுவான் என் அப்பா மாதிரி நா ஆகிடவே கூடாது அண்ணா மாதிரி சுயமா உழச்சு சொந்த கால்ல நிக்கணும். இப்போ நீ காசு கொடுக்கவும் அவன் மனசுல இருக்கிற இயலாமை வார்த்தையா வெளில வருது. இதெல்லாம் நீ மனசுல போட்டு குழப்பிக்காத மாமா. நம்ம பரிதி தான சொன்னான் விடு என்று அவன் உயரத்திற்கு எக்கி அவன் நெற்றியில் இதழ் பதிக்க ஏனோ அவன் மனதில் இருந்த பாரம் விலகி மனம் லேசாக உதடுகள் புன்னகையில் விரிந்தது.

அவளை இறுக அணைத்துக்கொண்டவன் "இதுக்கு தான் நீ கூடவே இருக்கணும்னு சொல்லுறது செல்லம்மா பாரு இவ்ளோ நேரம் இருந்த குழப்பம் எல்லாம் மறைஞ்சிருச்சு. சீக்கிரம் இந்த ஆறு மாசம் முடியனும் கடவுளே" என்று வேண்டிக்கொள்ள கடவுள் இருவரின் எதிர்காலத்தை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று இருந்தார்

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Où les histoires vivent. Découvrez maintenant