3

5 0 0
                                    

"மிஸ்.தேவகி?" அவன் குரல் தாழ்வாக இருந்தது.

"ஆம்?"

"உன் மாமா என்னை அனுப்பியிருக்கிறார். வா."

"அவர் எங்கே?"

நான் அவனிடமிருந்து ஓட வேண்டும் என்று என் உள்மனம் வெறிக்கொண்டு கடத்தியது. சிறிய வயதில் இருந்து சொல்லி கொடுக்கப்பட்ட Common Sense தான்.

ஆனால் அவருக்கு என் பெயர் தெரிந்துள்ளது.. இந்த அன்னிய நகரத்தில் என் பெயர் யாருக்குத் தெரியும்?

அவர் என்னை நோக்கி நடந்து வந்து, கைகளின் வியர்வையில் ஈரமாக இருந்த ஒரு துண்டு காகிதத்தை என்னிடம் கொடுத்தார்.

நான் அதை எடுத்து படிக்க திரும்பினேன்.

அது என் மாமாவின் கையெழுத்து என்பதில் சந்தேகமில்லை.

அது அவரிடமிருந்து வந்த ஒரு சிறு குறிப்பு.


விக்கி கண்ணா,
மன்னிக்கவும் என்னால் நேரில் வர முடியவில்லை. இவர் என் நண்பர். நீ இவரை நம்பலாம். உன்னை என்னிடம் பத்திரமாக அழைத்துச் வருவார்.


விக்கி! ஹரி மாமா-வை தவிர என்னை விக்கி என்று யாருமே அழைத்ததே இல்லை.

அந்த ஈரமான காகித துண்டை நம்ப முடிவு செய்தேன்.

இப்போது நினைத்து பார்த்தால் தெரிகிறது - என்ன ஒரு முட்டாள்தனமான முடிவு!

அந்த நபர் ஒரு நேர்த்தியான, நீளமான வேனை நோக்கி சைகை செய்தார், அதன் பித்தளை விளிம்புகள் வெளிறிய நிலவொளியின் கீழ் என்னை அச்சுறுத்துவது போல் மின்னின.

வர்ணிக்க முடியாத ஒரு வித குழப்பமும், பயமும் என்னைப் பற்றிக் கொண்டது.

ஆனால் என் சூழ்நிலைகளின் அவசரம் - இந்த அந்நிய ஊரில், ஏன் இந்த உலகத்திலேயே - எனக்கு என்று இருக்கும் கடைசி உறவான என் ஹரி மாமாவிடம் சீக்கிரம் போய் சேரவேண்டும் என்ற பதட்டத்தில் - எந்த ஒரு 14 வயது பெண்ணும் எடுக்கும் ஒரு தீர்மானத்தை எடுத்தேன்.

வெடுவெடுவென்று அந்த வேனினுள் போய் அமர்ந்தேன்.

சென்னை நகரப்புரத்தின் வழியான பயணம் ஒரு வித இயந்திர அழகியல் ததும்பியதாக இருந்தது. Unity-யின் aesthetics ரசனை மிக்கதாகத்தான் இருந்தது.

கியர்ஸ் திரும்பியது. என்ஜின் சீறிப்பாய்ந்தது.

புறநகர்ப் பகுதியை நெருங்கியதும், நகரின் பொலிவு மறைந்து, மறக்கப்பட்ட வரலாற்றுச் சின்னம் போலத் தோற்றமளிக்கும் ஒரு பெரிய மாளிகைக்கு வந்து சேர்ந்தோம்.

Unity -க்கு முன்பு இருந்த, வாழ்ந்த ஒரு கடந்த காலத்தின் நினைவுச்சின்னம் போல தரையில் இருந்து எழுந்தது அந்த மாளிகை.

கடந்த காலத்தில் கம்பீரமாக அனால் நிகழ் காலத்தில் தேய்ந்து இருக்கும் அனைத்து மாளிகைகளின் இலக்கணம் இந்த மாளிகைக்கும் பொருந்துவது போல் தான் இருந்தது.

சில்லுகளாக சரிந்து கொண்டிருக்கும் பெயிண்ட். சுவற்றை ஒட்டிக்கொண்டு படர்ந்திருந்த செடி கொடிகள். உடைந்த ஜன்னல்கள. பிரம்மாண்டம் மற்றும் மர்மம் கலந்து வீசும் ஒரு மங்கிய ஒளி. அதன் கடந்த கால பெருமை நாட்களின் கதைகளைச் சொல்ல முயற்சிப்பது போல தோன்றும் வயதான, வலிமையற்ற மரங்கள்.

இந்த பழங்கால கட்டமைப்பை அணுகத் துணிந்த எவருக்கும் இரண்டு உணர்வுகள் தோன்றிய தீரும்.

வசீகரம். எச்சரிக்கை.

வேனை ஒட்டி வந்த அந்த மர்ம மனிதன் ஒரு துருப்பிடித்த வாயில் வழியாக என்னை அழைத்துச் சென்றான்.

அந்த பெரிய வாயில், முறுக்கப்பட்ட உலோகச் சிற்பங்கள் மற்றும் மின்னும் வாயு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு முற்றத்தினுள் திறந்தன.

அந்த மாளிகையின் உள்ளே, மறக்கப்பட்ட ஆடம்பரத்தின் கதைகளை அதன் இருண்ட மரப் பலகைகளும் வயதான leather furniture- களும் கிசுகிசுத்துக்கொண்டிருந்தன.

கிழிந்த திரைச்சீலைகளை ஊடுருவிச வந்த நிலவொளியின் இடுக்கில் தூசித் துகள்கள் நடனமாடின.

கடுமையான முகத்தையுடைய அந்த மாளிகையின் மூதாதையர்களின் உருவப்படங்கள் எனது ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பது போல் தோன்றியது.

நிழல்கள் நடனமாடிக்கொண்டு இருந்த அந்த அறைக்குள் என்னை அழைத்துச் செல்லப்பட்டேன்.

அப்போதுதான் நான் அவர்களை முதன்முதலில் பார்த்தேன்.

The Cobras.

கருணை உடைந்து மீளும்Where stories live. Discover now