இது என்னுடைய முதல் காதல் கதை. சிறு வயதில் இருந்து எழுதுவதற்கு மிகவும் பிடிக்கும் என்பதால் கிடைக்கும் தாள்களில் கிறுக்கினேன். இப்பொழுது இதில் கிறுக்கி உள்ளேன்!
படிப்பதும்! அடிப்பதும்! உங்கள் விருப்பம் நீங்கள் எதை கொடுத்தாலும் நான் அதை ஏற்ற...
நம்முடைய கதையின் கதாநாயகியின் பெயர் "இஷித்தா". கதாநாயகி வாழும் இடம் ஒரு சிறிய கிராமம்.
இஷித்தா பார்ப்பதற்கு "அழகாகவும்லட்சணமாகவும்" இருக்கக்கூடியவள் , ஆனால் வெளியூர் செல்ல சுதந்திரம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள். சுதந்திரபறவையாய் சுற்றித்திரிவாள் தன் சொந்த ஊரில் .
எப்பொழுதும் மிதிவண்டியில் தன் தோழிகளோடு பறந்து கொண்டுதான் இருப்பாள். இவளின் தந்தையான கோவிந்தராஜ் கோவில்களில் "பிரசங்கம்" செய்பவர்.
வீட்டின் முதல் பிள்ளையும் இவள் தான் கடைசி பிள்ளையும் இவள் தான் அவ்வளவு ஏன் செல்லபிள்ளையும் இவள் தான்.
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
இஷித்தாவின் மாமாவான மனோகரன் சென்னையில் வசித்து வருகிறார். இவளுக்கு மனோகரன் மாமா என்றாலே அவ்வளவு பிரியம். அளவு கடந்த "அன்பும் , பாசமும்" வைத்திருக்கிறார் ! மனோகரன்தன் மருமகள் மீது !!!
இஷித்தா சைக்கிளில் பறந்து கொண்டிருந்த வேளையில், எதிரே வந்த நாராயணன் என்னடி மா நோக்கு வேற வேலையே இல்லையோ என்றார் !!!
அப்பா கோவில்ல பிரசங்கம் செய்றாரு மாமா சத்த என்னையும் வர சொன்னார் நீயும் வரேலா என்று கேட்க , இல்லடி மா நேக்கு வேற சோலி இருக்கு, நீயே போ என்று நழுவினார்.
கோவிலை அடைந்தவள் கோவிலை சுற்றி விட்டு வந்து பிரசங்கத்தில் மூழ்கினால். பிரசங்கம் முடிந்ததும் அங்கு கிடைக்கும் "அவல்உருண்டையை" வாங்கி சாப்பிட்டால் .
பின்பு அப்பாவுடன் சேர்ந்து "லட்சுமிநாராயணனை" வேண்டி விட்டு வீட்டிற்கு திரும்பினர்.
வீட்டிற்கு வந்ததும் அம்மா சாரதாம்பாள் அவளுக்கு பிடித்த "வடித்தசாதமும்தக்காளிதொக்கும்" செய்து வைத்திருந்தாள்.
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
வீட்டிற்குள் நுழையும் முன்னரே வாசனையை நுகர்ந்தவள் சமையலறை நோக்கி ஓடினாள். ஒரு நாள் இஷித்தாவிற்கு ஒரு தபால் வந்தது, அதில் "You are selected for this job ! Congratulations Eshitha!" என்று Oppoinment Order சென்னையிலிருந்து வந்தது .
அதைப் பார்த்ததும் கோவிந்தராஜ் ஏதும் பேசாமல் வெளியே சென்று விட்டார்.
நாட்கள் பல உருண்ட ஓடின. இஷித்தாவிற்கு கோவிலில் சாமிக்கு பூ அலங்காரம் போன்ற பணிவிடைகள் செய்வதில் இவளுக்கு ஆர்வம் அதிகம்.
வழக்கம்போல் கோவிலில் பூ கட்டிக் கொண்டிருந்த நேரத்தில் டிகிரி முடிச்சாச்சு அப்புறம் என்ன என்ற குரல் கேட்டது. குரல் கேட்ட திசையில் திரும்பி பார்த்தால் இஷித்தா.
நீதானா "பூமிகா" நான் யாரோ நினைச்சு பயந்துட்டேன். என்றால் இஷித்தா. ம்ஹூம் ஒவ்வொருத்தருக்கும் பயந்துட்டே இரு, என்னைக்கு சொல்ல போற அப்பாகிட்ட., என்று கேட்டவுடன் அவள் மௌனம் சாதித்தாள்.
யாரும் கடைசிவரை உனக்காக வரமாட்டாங்க டி நீபடிச்சபடிப்பும், நீபாக்குறவேலையும்தான்உன்கூட இருக்கும். இஷித்தா ஏதும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.
கிளாஸ் Topper நீ உனக்கு சொல்லி புரிய வைக்கணும்னு அவசியம் இல்ல, பாத்துக்கோ நான் வரேன் டைம் ஆயிடுச்சு. வீட்ல அப்பா தேடுவாரு. சோகம் கலந்த சிரிப்புடன் அவளைப் பார்த்து தலையசைத்தாள் இஷித்தா.