ஏன் தம்பி எடுக்க மாட்ற என்ன ஆச்சு என்றார் அர்ச்சகர், நா...நான் ஒரு முஸ்லிம் சாமி அதனால தான் எடுக்க மாட்டேன்னு சொன்னேன். எப்படிப்பா கோயிலுக்கு எல்லாம் வர்ற..... மதம் தானே சாமி நம்மள பிரிச்சுச்சு சாமியா பிரிச்சு வச்சுச்சு!!! என்றான். முஸ்லிம் பையனா இருந்தாலும் நல்லா பேசுற தம்பி, என்றார் அர்ச்சகர்.
அப்பொழுது எதர்ச்சியாக அவன் திரும்ப இஷித்தா இவனைப் பார்க்க; ஆஷிஃப் இஷித்தாவை பார்க்க; இருவரும் கண்களிலே காதல் வாழ்க்கையை தொடர ஆரம்பித்தது போல் தெரிந்தது. பிறகு அங்கிருந்து அவள் நகர்ந்தால். ஆஷிஃப் - ம் முகத்தில் புன்னகையோடு தன்னை அடக்கிக் கொண்டான் .
ஆஷிஃப் மனதில் நினைத்துக் கொண்டே இருந்தான், அவ உண்மையிலேயே நம்மள தான் பாத்தாளா இல்ல வேற யாரையாவது பார்த்தாளா நம்மளுக்கு தான் இப்படி தோணுதா ஒன்னும் புரியலையே என்று மண்டையை பிடித்துக் கொண்டான்.
முகிலன் கோவிலில் விளக்குகளை ஏற்றி விட்டு வெளியே சென்றான், பின்னாடியே அவனும் சென்று வீட்டிற்கு சென்றனர்.
பின்பு ஆஷிஃப் கோவிலில் நடந்ததை நினைத்து கொண்டே இருந்தான். அன்று அப்படியே பொழுது கடந்தது.
மறுநாள் இஷித்தா வும் ஆஷிஃப் - ம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே நடந்து வந்தனர். சட்டென நின்றனர், நீங்க இந்த ஊர்காரர் மாதிரி தெரியலயே என்று கேட்டாள்.அவனும் சிரித்துக் கொண்டே ஆமாங்க நான் இந்த ஊர் இல்ல ; சென்னை - ல இருந்து ஊர் சுத்தி பாக்க வந்துருக்கேன் என்றான்.
ஓ அப்டியா! 😆 வேற ஊரே இல்லாத மாதிரி இங்க வந்துருக்கீங்க என்றாள். அப்பொழுது ஆஷிஃப் என்னங்க கிராமத்து பொண்ணா இருந்துட்டு இப்டி பேசுறீங்க. நான் என்னங்க பன்னுனேன். கிராமத்துக்கு ஏன் வந்தீங்க தானே கேட்டேன். இங்க தாங்க இருக்கு எல்லாம் நைட்ல அடிக்கிற தென்றல் காற்று, ஆடு மாடு, கோழி அந்த மண்வாசனை வயல் வரப்பு மலை, இதெல்லாம் சிட்டி சைடு கிடைக்காதுங்க பார்க்கவே முடியாது.ஏங்க, என்னங்க என்ன ஆச்சுங்க, ஹலோ என்னங்க,.... சொல்லுங்க இருக்கேன் இருக்கேன். என்னாச்சுங்க உங்களுக்கு ஸ்டன் ஆகி நிக்கிறீங்க.
சிட்டில இருந்து வந்த ஒருத்தர் கிராமத்தை பத்தி எவ்ளோ அழகா எடுத்து சொல்றாரு ஆனா கிராமத்திலே பிறந்து வளர்ந்த எனக்கு இது தெரியாம போச்சே. அதாங்க கொஞ்சம் ஸ்டன் ஆயிட்டேன்.
ஆமா உங்க நேம் என்ன சொன்னீங்க,..... ஹலோ நான் இன்னும் என் நேம் சொல்லவே இல்ல.
அப்ப சொல்லுங்க தெரிஞ்சுக்கிறேன். ஓகே என்னோட நேம் இஷித்தா. உங்க நேம் என்ன......?என்னோட நேம் ஆஷிஃப். If you don' t mind உங்க ஊரு எனக்கு சுட்டி காட்ட முடியுமா?.....
YOU ARE READING
பிராமியக் காதல்
Romanceஇது என்னுடைய முதல் காதல் கதை. சிறு வயதில் இருந்து எழுதுவதற்கு மிகவும் பிடிக்கும் என்பதால் கிடைக்கும் தாள்களில் கிறுக்கினேன். இப்பொழுது இதில் கிறுக்கி உள்ளேன்! படிப்பதும்! அடிப்பதும்! உங்கள் விருப்பம் நீங்கள் எதை கொடுத்தாலும் நான் அதை ஏற்ற...