மணிகண்டன் இவனுக்கு வயது 10, படிப்பிலும் சுட்டி விளையாட்டிலும் சுட்டி .இவனுடைய தாயார் பெயர் லட்சுமி. காதல் திருமணம் செய்து கொண்டார்.திருமணமான நான்கு வருடங்களில் இவளது கணவன் விட்டு சென்று விட்டான் .
கணவனும் போக ,காதல் திருமணம் செய்து கொண்டதால் பெற்றோரும் கைவிட தளர்ந்து விட்டாள் அவள் இருப்பினும் தன் மகன் தன் மடியில் தவழும் தருணமே அவள் வாழ்வின் சந்தோஷ தருணம் .குடி இருப்பதோ குடிசை வீடு மழை பெய்தால் வீட்டினுள் தான். இப்படி இருக்க பிள்ளையின் படிப்பிற்காகவும் ,வயிற்றினை கழுவதற்காகவும் பலர் வீட்டில் பாத்திரம் கழுவினாள் .வந்த சிறிய வருமானத்தில் வருடங்கள் ஏதோ சென்றது .போதாத கஷ்டத்தில் வாழ்ந்த இவர்களின் வாழ்க்கையில் வந்தது வினை .லட்சுமி ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டாள் நாளுக்கு நாள் அவள் நிலைமையும் மோசமடைந்தது. மருத்துவமனையில் பரிசோதித்து வெளியே வந்த அவளின் கையில் மருத்துவர் எழுதி கொடுத்த மருந்துச்சீட்டும் அதை வாங்க நூறு ரூபாயும் இருந்தது அதை எடுத்துக் கொண்டு மருந்தகம் சென்றாள்.அங்கே வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி அவள் கையில் இருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு ஓடினான் .பாவம் என்ன செய்வால் சத்தம் போட கூட உடம்பில் தேம்பில்லை தனக்கு தெரிந்த ஒரே வழி கண்ணீர் மட்டும் தான் என்றபடி முந்தனையில் கண்ணீரைத் துடைத்த படி உச்சி வெயிலில் வீட்டிற்கு நடந்து சென்று படுக்கையில் மயங்கினாள் அவள் .அப்பொழுது மணி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தான் தன் தாயிடம் சென்று ,
"அம்மா, நாளை பள்ளியில் பணம் கட்ட சொன்னார்கள் இல்லையெல் என்னை வர வேண்டாம் என்றார்கள் " என்றான் .
அதற்கு அவன் தாய் சரி நாளை கட்டி விடலாம் என்று கூறி சமாளித்தாள் ,பின் மணியிடம் நீ சென்று உன் சித்தப்பாவிடம் இந்த மருந்துச்சீட்டை காண்பித்து சிறிது பணம் கடனாக வாங்கி வா என்றாள் .தன் தாயின் உடல் நிலையை அறிந்த அவன் தாயின் சொல்லின் படி சித்தப்பாவின் வீட்டிற்கு சென்றான் . மணியின் சித்தப்பனோ கஞ்சப்பிசினாறி ஒரு ரூபாய் கொடுக்கவே நூறு முறை யோசிப்பான் ,மிகவும் பணத் திமிரு பிடித்தவன் . அங்கு வாசலில் அமர்ந்திருந்த அவரிடம் மணி சென்று ,
"சித்தப்பா ,அம்மாவுக்கு உடம்பு சரியில்லை கடனா கொஞ்சம் பணம் கேட்டாங்க " என்றான்.
ВЫ ЧИТАЕТЕ
A Hundred Rupee Note
Юморஇது என்னுடைய முதல் கதை . ஒரு ஏழ்மையான சிறுவன் தனது தாயின் மருத்துவ செலவுக்காக போராடிய தருணங்களில்