6.15 ரயில புடிக்க 4.30 மணிக்கு வச்ச அலாரம்..
அடிச்சு அடிச்சு ஓஞ்சு போச்சு மணியோ இப்ப ஒன்பது ஆயிடுச்சு...
நேரமே எழுந்திருந்தா கூட்டமே இல்லாம ஜம்முனு போயி மதிய சாப்பாட்டுக்கு எறங்கிருக்கலாம். விதி யாரைத் தான் விட்டுச்சு... அதுலயும் நான்னு சொன்னா ஒரு சொம்பு தண்ணி எக்ஸ்ட்ராவா குடிச்சிட்டு வந்து வேலை செய்யுமே... இனி பொலம்பி என்ன செய்ய... குளிச்சிட்டு கெளம்புவோம்...
வேண்டாம்... வேண்டானு சொன்னாலும் இந்த பக்கி கேக்க மாட்றான்... ரிசப்ஷனுக்குப் போயே ஆகனும்னு ஒத்த கால்ல நிக்கிறான்...
ஷப்பப்ப்பாஆஆஆ... ஒரு வழியா குளிச்சி முடிச்சாச்சு... கவுண்டர் வீட்டு கண்ணாலம் வேற... எதப் போடலாம்..?
ஆன்ன்... இருக்கவே இருக்கு நம்ம ஜீன்ஸ்... ரெண்டு தடவ போட்டது தான இன்னிக்கு போட்டா என்ன கொறஞ்சிட போகுது... குட்மார்னிங் பாடி ஸ்ப்ரே அடிச்சுவிட்டா யாருக்கு தெரிய போகுது இதெல்லாம்...
அடேய் கெளம்புடா நேரமாச்சு... மணி 10 ஆச்சு மினி டிபன் தீந்து போய்டும்...
நம்ம நீலாபவன் ஹோட்டல்ல இந்த மினி டிபன் ஒன்னு தான் நம்ம பசிக்கும், பட்ஜெட்டுக்கும் சரியா வரும். ஒரு இட்லி, ஒரு வடை, ஒரு மினி தோசை, ஒரு பூரி, ஒரு கரண்டி நெய் முந்திரி போட்ட வெண்பொங்கல் வித் மினி காபினு வயிறு நிரம்பிடும்... இத்தனையும் ₹.65ல் கிடைக்கும் ஆனா 10மணிக்கே போகனும் இல்லனா நம்மல மாதிரி பல சாப்பாட்டு ராமன்கள் களமாடி காலி பண்ணிட்டு போயிடுவாங்ய.
அடேய்.... வாடா சீக்கிரம் வந்து தொலை...
யா அம் கமிங் மேன்...
ஹய்யோ இவனுக்கு தமிழ் தெரியாது எனக்கு தெலுங்கு தெரியாது ரெண்டு பேத்துக்குமே இங்கிலீசும் ஒழுங்கா வராது... இவன வச்சிட்டு எப்டி மாரடிக்க போரேனோ... ஆண்டவா... ஆனா தமிழ் தெரியாத வரைக்கும் எவ்ளோ வேணா திட்டிக்கலாம்... 😂😂
அண்ணா எனக்கு ஒரு மினி டிபன்..
சாரி தம்பி மினி டிபன் காலி ஆயிடுச்சு..