தேடினேன் தெய்வம், தெய்வம்
எங்கே? !
ஓடினேன் வடக்கும் தெற்கும்
எங்கெங்கோ
கடனாளிக்கு காசு தெய்வமா?
உடனே உதவும் உள்ளம் தெய்வமா?ஏழையின் சிரிப்பில் தெரிவது தெய்வமா?
பாழும் பசிக்கு சோறு தெய்வமா?
இன்னும் எத்தனையெத்தனையோ தெய்வங்கள்........எல்லாமே அப்போதப்போதே தோன்றி மறைபவை.......
தேடினேன் தெய்வம், தெய்வம்
எப்படி தெரியும், புரியும்தானே....
ஆம்....
கடவுள் - கட-உள்- உள்ளே
நீதான் கடவுள்
உன்னை அறி
நீதான் அரிஅவன் , இவன் - எவன்
உள்ளத்தின் உள்ளே கடந்தவனே சிவன்என்ன கடப்பது - உள்ளே,
எப்போதும் மகிழ்ச்சி -
எக்கனமும் மகிழ்ச்சி -
எதுவும் மகிழ்ச்சி -
அதானே தெய்வம் -இந்த
மகிழ்ச்சி எப்போதும்-உள்ளே
இருந்தால் அவன்தான்
கடவுள் - அதுதான் தெய்வம்
எனில்
தேடு எப்போதும் - எதிலும்
மகிழ்ச்சி