சித்து அந்த பையை திறந்து பார்த்து அதிர்ந்தான்,அதன் உள்ளே அவன் பார்த்த போது அதில் சுபஸ்ரீ எனும் பெயர் இருந்தது மேலும் இரண்டாம் வருடம் மெப்கோ கல்லூரி என்றும் இருப்பதைக் கண்டான்
அவன் குதூகலத்தில் கத்தினான் ஏனெனில் அவன் செல்லவிருப்பதும் அக்கல்லூரியில் நடக்கும் சிம்பயோசியத்திர்க்குத்தான்.........அவனுக்கு அது கனவா நிஜமா என்றே தெரியவில்லலை..........அவன் நன்பன் ராஜை பிடித்து கத்தினான்......
"மச்சான் என்னோடது உண்மையான லவ் மச்சான் அந்த காதலே எங்களை சேர்த்து வைக்குதுடா" சித்து
"உனக்கு எங்கயோ மச்சம் இருக்குடா........இந்த மாதிரி ரேரா தான்டா நடக்கும் உனக்கு நடந்துருக்கு,ட்ரீட் வை மச்சான்" ராஜ்
இருவரும் பேசிக்கொண்டிருக்க லெக்ட்சரர் கிளம்பும்படி கூறினார் அவர்களும் கிளம்பினர்.......சித்து மனதிற்குள் இது கனவா அல்லது நினைவா என புரியாது வானத்தில் மிதந்து கொண்டிருந்தான்
கல்லூரி பேருந்து சரியாக 10 மணிக்கு மெப்கோ கல்லூரியில் வந்து சேர்ந்தது. சித்து தன் காதல் தேவதையை எப்போது காண்போம் என்ற ஆர்வத்துடன் கல்லூரிக்குள் சென்றான் .ஆடிட்டோரியத்திற்குள் சென்றான் சிம்போசித்தை ஆர்வமின்றி கேட்டுக்கொண்டிருந்தான்.
பாவம் ராஜின் நிலைமைதான் கவலைக்கிடமாக ஆயிற்று. சித்து பேசி பேசி கொன்றுகொண்டருந்தான் அவன் காதல் தேவதையைப்பற்றி. சரியாக 1 மணிக்கு முடிந்தது.
அந்த கல்லூரியில் அவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டது.சித்துவிற்க்கு உணவு மேலே ஆர்வம் இருக்கும்.அவன் அவளை எவ்வாறு சந்திப்பது என திட்டம் போட்டுக்கொண்டடிருந்தான்.
உணவு இடைவேளை முடிந்து அவர்களால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை,அவர்களுடைய ஆசிரியர் அவன் அருகில் இருந்ததால் வெருப்புடன் ஆடிட்டோரியம் சென்றனர்.