சிறகுகள்...( 500 வார்த்தைகளில் ஒரு சிறிய கதை)

824 67 31
                                    

  "ருத்ரா... ருத்ரா... எழுத்துரு சீக்கிரம்... முதல்நாளே லேட்டா போனைன்னா அவங்க என்ன நினைப்பாங்க..." என்று தன் அதட்டலை செலுத்தி அவனை எழுப்பிய தன் தாயை எழுந்து முறைத்தபடி அமர்ந்தான். அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவர் அமைதியாக சென்றார்.

    கல்லூரி நாட்களில் மற்றவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை  தீர்த்துவைப்பதில் சிறிதும்நாட்டம் இல்வாதவன் இப்போது கணிதத்துறையில் முதுகலை பட்டம் பெற்று தன் வங்கியில் வேலைசெய்ய வேண்டும் என்ற கனவை விட்டுவிட்டு தன் தந்தையின் வர்புறுத்தலின் பேரில் இளநிலை கல்வியியல் சேர்ந்தான்.

     நாட்களும் வேகமாக ஓடி ஒருவருடம் முடிய இரண்டாம் ஆண்டில் முக்கிய நிகழ்ச்சியான teaching practice ஆரம்பமாகியது.

   தான் கேட்ட பள்ளியில் teaching practice செய்ய இடம் கிடைக்காதது ஒருபுறம் அவனை வாட்டியது.

     ஒருவாறாக கிளம்பி தனது uniform, identity card யை அணிந்துக்கொண்டு அப்பள்ளியை நோக்கி விரைந்தான்.

      அதுஒரு அரசிடம் இருந்து நிதிஉதவி பெறும் பள்ளி. அதன் பெரிய வளாகம் அவனை மற்றும் அவனுடம் வந்து இருக்கும் trainees பன்னிருவரையும் வரவேற்றது. அவனின் கெட்ட நேரம் அவனுக்கு துனையாக இருக்க ஒருவனும் அங்கு இல்லை. பதிமூன்று போரில் இவன் ஒருவனே கணிதத்துறையை சேர்ந்தவன். அதைவிட முக்கியமான செய்தி என்னவென்றால் அவர்களில் ருத்ரதேவன் மட்டுமே ஆண்.

     அனைவரும் நேராக தலையை ஆசிரியரிடம் சென்று அனுமதி பெற்ற பிறகு assembly முடித்து விட்டு தனக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பறைக்கு சென்றனர். ருத்ராவிற்கு ஒன்பதாம் வகுப்பு இ பிரிவு கொடுக்கப்பட்டது. முதல் ஒருவாரம் அங்கு இருக்கும் ஆசிரியர்கள் நடத்துவதை observe செய்ய வேண்டும் என்பதால் அது ஏதோ கடினமாக இருந்தது அவனுக்கு.

      தான் ஏற்கனவே படித்து வெறுத்து கடினப்பட்டு வகுப்பை ஓட்டி பள்ளியை கடந்து வந்தால் திரும்பவும் பள்ளியிலேயே அமர வைத்துவிட்ணார்களே... என்று துக்கம் தொண்டையை அடைக்க அந்த சலிப்பான நேரத்தை ஓட்ட தான் தன் case study record ற்காக ஒரு மாணவனை தேடினான்.

சிறகுகள்Donde viven las historias. Descúbrelo ahora