ஊழ்வினை - சிறுகதை

904 21 18
                                    

துப்பாக்கியிலிருந்து தெறிக்கவிடப்பட்ட தோட்டா அவனை நோக்கி பாய்ந்தது காற்றை கிழித்து கொண்டு விரைந்த அந்த தருணத்தில்  அவன் அப்படி செய்திருக்ககூடாது தான் இருந்தாலும் யார் செய்த புண்ணியமோ ஏன் முற்பிறவியில் அவன் செய்த புண்ணியமாக கூட இருக்கலாம் ஒருவேளை தெறித்த தோட்ட கூட அவன் காதருகே "டேய் நவுருடா" என்றதோ யார் கண்டார்கள்! காலில் சுருங்கெற்று கடிக்க, குனிந்தவன் அன்று எதிரில் நிற்பவனை பரலோகம் அனுப்பி வைத்தான். வைத்தவன் குறி தப்பியது, இது அடிக்கடி பரம்பொருளுக்கே நடக்கும்போது இவனுக்கு நடவாதா? என்ன!. துப்பாக்கியின் முனையில் இருந்து வெளிப்பட்ட அந்த சூட்டின் புகைச்சல் தான் இப்போது எய்தவனின் நெஞ்சிலும் புகைகிறது.

அது ஒரு நடையாளர் பூங்கா ஏரிகறையின் ஓரத்தில் அமைந்துள்ள அந்த பூங்காவில் சுமார் இருவது வருடங்களுக்கு முன்பு மும்மாரி மழையினால் ஏரியில் தண்ணீர் வழிந்தோடும் மேட்டுகுடிகள் படகு சவாரி செய்வார்கள் பூர்வகுடிகள் அங்கே மீன் பிடித்து அவர்களை வேடிக்கை பார்ப்பார்கள் யார் கண்பட்டதோ இல்லை கண்படவில்லை மனிதனின் கால்பட்டுவிட்டதுஇருபது ஆண்டுகளில் ஏரி மயானமானது புதர் மண்ட தொடங்கியது கயவர்கள் அடைகலம் அடைந்தார்கள் வடமதுரையின் கோவா லாஸ்விகாஸ் எல்லாம் அந்த பூங்கா தான் கஞ்சா தொடங்கி கேட்டது கிடைக்காதது என்று எதுவும் அங்கில்லை இருந்தும் சில வேடிக்கை மனிதர்கள் வாடிக்கையாக நடைபோடுவதுண்டு ஆகயால் அந்த மாலைவேளையின் அவ்வபோது இப்படி சில சம்பவங்கள் நடப்பதுண்டு அதை தவறாமல் இவர்கள் இருவரும் பார்த்து ரசிப்பதுண்டு.

"என்னடா இது! இப்பலாம் இங்க அடிக்கடி இப்படி நடக்குது" என்றான் தேவா.

"ஆமா டா இங்க என்னமோ பன்றாய்ங்கடா! என்னானு நம்ம கண்டுபிடிக்கிறோம்" என்றான் சித்தார்த்.

"இது நமக்கு தேவ இல்லாத வேலை"

"வேலையே இல்லாமா தான சுத்திட்டு இருக்கோம் அதுக்கு இந்த வேலைய பாப்போம்" என நக்கலாக சொன்னான் சித்தார்த்.

ஊழ்வினை உறுத்தும்Where stories live. Discover now