நதி

114 19 1
                                    

காவேரியை கர்நாடகம் தர மறுக்கிறது, முல்லை பெரியாரின் நீரைத் தர கேரளா தயாராக இல்லை. நம்மீது இரக்கப்பட்டு ஒருவர் கிருஷ்ணா நதி நீரை அளித்துக் கொண்டிருந்தார், இப்போது அவர்களுக்கே நீர் இல்லை என்னும் போது நமக்கும் நீர் வரத்து குறைந்து விட்டது.

இன்னும் எத்தனை நாள் நாம் அடுத்தவரை குறைக் கூறிக்கொண்டும், கேள்விக்கேட்டு கொண்டும் இருக்கப்போகிறோம். பொன்னைக் கூட யாசிக்காத தமிழன் இன்றோ நீரை யாசிக்கும் நிலையில் உள்ளோம். இங்கு அனைவரும்   "காவேரி எங்கள் உரிமை. நீரின் வரத்தைத் தடுப்பது நியாயமற்ற செயல்." இன்னும் எத்தனையோ முழகங்கள், கூச்சல்கள், வாதாட்டம். வராத காவேரியை உரிமை எனக் கோறும் நாம், நம் கடமையைச் செய்ய மறந்துவிட்டோம்.

நம்மில் எத்தனை பேர் தாமிரபரணிக்காக்வும், நொய்யலுக்காககவும் போராடினோம். இன்னும் சாக்கடையாக ஓடும், இல்லை இல்லை, தேங்கி குப்பையாக கிடக்கும் அந்த இடத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு மூக்கை பொத்திக் கொண்டு அதை தினமும் கடந்து போகும் பலர் நம்முள் உள்ளனர். ஏன் அந்த குற்றவாளிகளுள் நானும் ஒருவள்தான். எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து ஒரு பாலத்தை கடந்து செல்வேன், அதன் அடியில் நான் நிறைய நாட்கள் கழிவு நீரைத்தான் பார்த்துள்ளேன், இன்னும் சில நேரங்களில் பிறர் அதில் குப்பைகளைக் கொட்டுவதையும் கண்டதுண்டு.

ஆனால் பிறகு ஒரு நாள் என் தந்தை என்னிடம் கூறியது அதிர்ச்சியும் வேதனையும் அளித்தது. அது நதி என்றும் அவர் சிறு வயதில், பள்ளிக்கு செல்லும் போது அதன் ஊற்று நீரை குடித்துவிட்டு செல்வது வழக்கம் என்றும் கூறினார்.

நம்மில் எத்தனைப் பேருக்கு, பவானி ஆற்றிலிருந்து மின்சாரம் எடுக்கிறேன் பேர்வழி என்று தமிழக அரசு கோடிகளை அதில் கொட்டி அதை மாசுபடுத்தியது தெரியும்.அமாராவதி நொயல் போன்ற நதிகள் தொழிற்சாலைகளால் சிதைந்து, அழிந்து கொண்டிருப்பது எத்தனைப் பேருக்கு தெரியும்.

நைய்யல்தான் தமிழ்நாட்டில் மிகவும் மாசு அடைந்த நதி. சரி நமது உரிமையான காவேரி தமிழ்நாட்டை அடைந்தால் அதன் நிலை என்ன தெரியுமா? தொழிற்சாலைகளால் பாதிக்கப்படும் நதிகளுள் அதுவும் ஒன்று. ஆனால் அது வராத வரைக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் அதை வைத்து அரசியல்  செய்து பிழைத்துக் கொள்வர். காவேரி கரையில் நீர் ஓடுகிறதோ இல்லையோ, மணல் லாரிகள் மட்டும் இடைவிடாமல் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. அதை வைத்து அரசியல் செய்பவர்களும் செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், அதை வைத்து பணம் பார்பவர்களும் பார்த்துக்கோண்டுதான் இருக்கிறார்கள். பாதிக்கபட்டதும், படுவதும் நாம் மட்டுமே.

தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணியை கூறு போட்டு குளிர்பான தொழிற்சாலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறோம்.அவனும் நீரை உறிஞ்சி கொண்டுதான் இருக்கிறான், இன்னும் உறிவான். அவனும் நிறுத்தப் போவது இல்லை, அரசும் தடுக்க போவது இல்லை.

தமிழகத்தில் மொத்தம் 91 நதிகள்கள் உள்ளனவாம். இதை கடத்த காலமாக கூறப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதை எதிர்காலமாக மாற்றவேண்டிய கட்டாயமும் பொறுப்பும் நம்மிடம் உள்ளது. இன்றும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் நாளைய தலைமுறை இல்லாது போகும் தமிழா.

ஒரு மனிதனை கொல்வது பாவம் என்று மதங்களும், தண்டனைக் கூரியது என்று சட்டமும் கூறுகிறது. ஆனால் ஒரு நதியை கொல்வது அநீதி. நம்மை வாழ வைத்த நதியை கொல்வது ஒன்றைத் தெளிவாக காட்டுகிறது ' அழிவு ' . அதனுடைய அழிவை அல்ல நம்முடைய அழிவை. ஏன்னென்றால் " karma is a Boomerang ."

ஒரு ஊமையின் பேனாWhere stories live. Discover now