என்னங்க... நான் போகத்தான் வேண்டுமா?
கண்டிப்பா நீ போகனும்.
வேண்டாங்க... நான் வேண்டுமானால் கடிதம் எழுதிவிடுகின்றேன்.
உத்ரா.... நான் சொன்னால் கேட்பாயா மாட்டாயா?
அப்படி இல்லைங்க.... நான் இதுவரை இப்படி யார் வீட்டிற்கும் சென்றது இல்லை அல்லவா அதனால் தான்....
வேறு எந்த கடிதம் வந்திருந்தாலும் நான் உன்னை கட்டாயப் படுத்த மாட்டேன்டா, ஆனால் இது ஒரு குழந்தை எழுதியது என்பதால் தான்...அவள் அம்மாவின் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறாள்.... இந்த வயதில் இப்படி ஒரு கடிதம்.... நீ கண்டிப்பாக போக வேண்டும் டா....
சரிங்க.. உங்களுக்காகவும், அந்தக் குழந்தையின் கடிதத்திற்காகவும் மட்டும் தான்.. சரியா?
சரிம்மா...
என்னங்க நீங்களும் கூட வாங்களேன்...
நான் எதுக்கும்மா.... நீ போய்ட்டு வாடா... அதுதான் சரி.... உன்னுடைய ரசிகையா கூப்பிட்டு இருக்காங்க..
அதனால் என்னங்க? என்னுடைய இந்த வெற்றிக்கு காரணமே நீங்கள் தான்... அவ்வாறிருக்க நான் ஏன் தனியாகச் செல்ல வேண்டும்.
உன் வெற்றிக்கு நான் காரணமா..? இல்லைம்மா... உன் வெற்றிக்கு என்றும் நீயும், உன் திறமையும் தான் காரணம்.
இல்லைங்க... திறமை என்பது எல்லோரிடமும் இருப்பது. அதை வெளிக்காட்டுபவரே வெற்றி பெருகிறார். அதாவது கல்லாய் இருக்கும் சிலைக்கு உருவம் கொடுக்கும் சிற்ப்பிக்கே அந்த பெருமை. அப்படி நான் என் திறமையை வெளிக்காட்ட சிற்ப்பியாய் இருந்தது நீங்கள் தானே...
ஏய் என்னடி சென்ட்டிமென்ட்டா பேசிட்டே.... போரடிக்குது என்று நக்கலாக கூறினான் மித்ரன்.
என்னடா ஓவரா பன்ற? போடா... எப்படி பேசினாலும் அதான்டா உண்மை.
என்னடி டக்குனு டா சொல்லிட்ட?? சரி பரவாயில்லை... என் பொண்டாட்டி தானே...
YOU ARE READING
ஓவியக் காதல்....
Fantasyஓவியம் போன்ற ஒரு அழகான காதலை இந்த சிறுகதை மூலம் வரைந்திருக்கின்றேன்