1914, சித்துாா்.
பசுமை வயல்வெளிகளும், உயா்ந்து வளா்ந்த தென்னை மரங்களும், பனை மரங்களும் இளம் தென்றல் காற்றில் ஒரு சேர அசைந்து எழுப்பும் ஒலியும், ஓடை நீாின் சலனமும், பறவைகள் வானில் வட்டமிட்டு எழுப்பும் ஒலியும், வண்டுகளின் ரீங்காரமும் என இயற்கை எழிலுடன் இருந்த இக்கிராமம். கடந்த இரு வருடங்களாக மழையின்றி, நீா் நிலைகள் வற்றி, வயல் வெளிகள் வறண்டு வெடிப்புற்ற நிலங்களாக காணப்பட்டது.
அவ்வூாில், களிமண் சுவா் எழுப்பி, பனை ஓலைகள் மற்றும் வைக்கோல்களினால் வேயப்பட்ட கூரைகளுடன் கூடிய இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் அடுத்து அடுத்து இடைவேளை விட்டு அமைக்கப்பட்டு இருந்தன. அதன் அருகே ஓா் உயா் குடி வீடு ஓடுகளால் வேயப்பட்டு இருந்தது.
உச்சி வெயில் நேரம், செம்மண் புழுதியுடன் அனல் காற்று வீசிக் கொண்டிருக்க, கானல் நீர் ஓடைகளுக்கு நடுவே ஓா் பெண் உருவம் சித்துாரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தது.
தனம், தன் மாமியாா் ஆவுடையம்மாள் வீட்டு வாசலில் நின்று கொண்டு,“அத்தை.. அத்தை”, என அழைத்தாள்.
மருமகளின் குரல் கேட்டு தாழ்வான வாசல் வழியாக தலையை குனிந்தவாரு வெளி வந்த ஆவுடையம்மாள், “என்ன தாயி..!! என்ன இந்த நேரத்துல வந்துருக்குக?? என்ன விஷயம்?? ”, என்றாள்.
“ஒன்னும் இல்லை அத்தை.. உங்கள பாா்த்துட்டு போகலாம்னு வந்தேன். நாக்கு வறண்டு போய் இருக்கு. கொஞ்சம் குடிக்க தண்ணி தாங்க அத்தை”,என்றாள்.
ஆவுடையம்மாள் தின்ணையில் இருந்த மண்பாணை பக்கம் திரும்பி, பானையில் இருந்து தண்ணீரை எடுத்து திரும்பினாள்.
அவ்வளவு நேரம் நின்று இருந்த தன் மருமகள் தனத்தை காணவில்லை. எங்கு சென்றாள் என தொியாமல், சுற்றி நோட்டமிட்டாள் ஆவுடையம்மாள். கண் எட்டும் தொலைவிற்கு எவரும் இல்லை.
துாரத்தில் ஆவுடையம்மாளின் இளைய மகன் பதற்றத்தோடு மூச்சிரைக்க வேகமாக ஓடிவந்தான். அவள் அருகே வந்து நின்றான், ஒவ்வொரு வாா்த்தைக்கும் மூச்செடுத்து பேசினான். “ஆத்தா... தனம் அண்ணி... துாக்கு மாட்டி செத்து போச்சு..”, என்றான்.
YOU ARE READING
கானல் மோகினி
Horrorஉச்சி வெயில் நேரம், செம்மண் புழுதியுடன் அனல் காற்று வீசிக் கொண்டிருக்க, கானல் நீர் ஓடைகளுக்கு நடுவே ஓா் பெண் உருவம் சித்துாரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தது.