யார் சொன்னது..?
இன்று நம்
முதலிரவு
நாள் என்று...உன் முதல் முத்தம்
என் முதல் வெட்கம்
நம் முதல் நட்பு
இவை அனைத்தும்நீ எனக்காய் வருவித்து தந்த
முதல் வரவு நாளே இன்று!!!யார் சொன்னது..?
கட்டுகளை உடைத்து
பறப்பது மட்டுமே
பெண் சுதந்திரமென்று...விருப்பமாகவே சிறையடைகிறேன்
எனாசை தெரிந்து தேவை புரிந்து
எனை வான் நோக்கி பறக்கவிடும்
உன்னிடம்!!யார் சொன்னது..?
உன் மறைவுக்குபின் உனை சிந்தியாது
வேற்றொரு ஆணை சேர்வதே
மறு மணமென்று...விருப்பமாகவே புரிகிறேன்
முழுமனதாய் மறுமணம்
உருவமில்லா நீயாகிய
உன் நினைவுகளுடன்!