~Episode 1~

34 1 1
                                    

👁 *Ghost In Blood*👁

☠☠☠☠☠☠☠☠☠☠

_*ALF.Sanfara*_

ரொம்ப நேரம் அசந்து தூங்கிவிட்டதால் மணி என்னவென்று கூட தெரியாமல் விழித்தான் *டேனியல்*.

இரவு எழுதியபடியே மேசைமேல் கிடந்த அத்தனை பேப்பர் களையும் தூக்கி ஒழுங்காக்கி வைத்துவிட்டு சோம்பல் முறித்து கொண்டே கடிகாரத்தை பார்த்தான்.
"ஹா..மணி 9 ஆச்சே. இவ்வளவு நேரமா தூங்கினேன். ஆபீசுக்கு போக நேரமாச்சே" என்று கத்திகொண்டே குளியலறைக்குள் குதித்தான்.

"அதென்னடா அங்க சத்தம்" என்று சமையலறைக்குள் இருந்து அம்மா கதரினின் ஓசை கேட்டு பதிலளித்தான் டேனியல்.

"பின்னே என்னம்மா. நீங்க ஏன் என்னை எழுப்பிவிடல்ல. இப்போ பாஸ் என்ன திட்ட போறாரு."

அத்தோடு ஷவரில் இருந்து தண்ணீர் கொட்டும் சத்தமும் கேட்டது.

இங்கே சமையலறைக்குள் டேனியுடைய தங்கை மீரா நுழைக்கிறாள்.

"அம்மா ,எவ்வளவு நேரம்தான் பிரேக்பாஸ்ட் ரெடி பண்ணிக்கிட்டே இருப்பே. காலேஜுக்கு போக டைம் ஆகுது. சீக்கிரம் கொடும்மா"

"இருடி, அண்ணன் என்ன டான்னா சுத்த சோம்பேறி,நீ அவசர குடுக்கை ரெண்டு பேருக்கும் இடையில மாட்டிக்கி நான் தவிக்கிறேன்."

என்று சொல்லி கொண்டே காலை உணவுக்கு தயார் செய்த தோசையையும், சம்பலையும் எடுத்து கொடுத்தாள்.

அதை மீரா சாப்பிடுமுன் தட்டி பறித்து சாப்பிட்டு கொண்டே அரக்க பறக்க ஓடி செல்ல அம்மா டேய் டேய் என்று கூப்பிட்டது கூட காதில் விழாமல்  பைக்கில் ஏறி கொண்டான்.

மீரா அவளாக எடுத்து சாப்பிட்டுட்டு காலேஜுக்கு செல்வதற்காக விரைந்தாள்.

"அம்மா நான் போய்ட்டு வர்றேன்.யாராவது என்னை தேடிக்கிட்டு வந்தா ஆபீசுக்கு வர சொல்லிடுங்க."

அடுத்த செகண்ட் ஆளையே காணும். நகரத்தில் உள்ள ரகசியமான பரநோர்மல் ஏஜென்சியில்
வேலை செய்கிறான் டேனி.

Ghost In bloodWhere stories live. Discover now