Episode 10

11 0 0
                                    

"மூனு லட்சமா! இது ரொம்பவே அதிகமா இருக்கு டேனி அண்ணா.நம்மால நிச்சயமா இதை கட்டவே முடியாது."

என்று மீரா சொல்லி ரொம்பவே கவலைப்பட்டதை பார்த்து டேனி அவளது தலையை தடவி ஆறுதல் சொன்னான்.

"அது உண்மைதான் மீரா. ஆனா நாம பணம் கட்டலேன்னா அம்மாவை டிஸ்சார்ஜ் பண்ண மாட்டாங்க. ஏதாவது பண்ணி நான் பணத்தை கலெக்ட் பண்ணிக்கிட்டு வந்துர்றேன். அதுவரைக்கும் அம்மாவை பத்திரமா பார்த்துக்கே."

என்று விட்டு டேனி ஹாஸ்பிடலை விட்டு வெளியேறினான்.

பைக்கை ஸ்டார்ட் பண்ணி புறப்பட்டவனுக்கு எங்கு போவது யாரிடம் கேட்பது என்று குழப்பமாக இருந்தது.கால்கள் தானாகவே வீட்டுக்கு கொண்டுபோய் விட்டது.

மீராவிற்கு போன் பண்ணி வீட்டு சாவி இருக்குமிடத்தை கேட்டுக்கொண்டான்.

பூச்சாடிக்குள் இருந்த சாவியை எடுத்து திறக்க பார்த்தால் கதவு திறக்கவே இல்லை .சிலநிமிடங்கள் முயற்சி செய்தே கழிந்தது.

ஏதாவது தாழ்ப்பாள் விழுந்துள்ளதா என பார்க்க சாவி துளை வழியாக பார்த்தான்.

ஆனால் டேனிக்கு அங்கே அதிர்ச்சி காத்து கொண்டிருந்தது. ஒரு பெண் அவனது வீட்டு ஹாலில் தூக்கு போட்டு தொங்குவது அவனுக்கு தெரிந்ததும் சட்டென பயந்து பின்வாங்கினான். அடுத்த நொடி தைரியத்தை வரவழைத்து கொண்டு கடும் பலமாக கதவை தள்ளி உதைத்தான். கதவு உடைந்து அவனும் அதே வேகத்தில் உள்ளே போய் பார்த்தால் அங்கே ஒன்றுமே இல்லை. ஒரே குழப்பமாக இருந்தது.

நேரே பெட்ரூமுக்கு சென்று அம்மாவுடைய நகைகளை எடுத்து க்கொண்டு இன்னும் விற்கக்கூடிய ஒரு சில பொருட்களையும் எடுத்து கொண்டு மறுபடியும் கதவை இழுத்து சாத்தி விட்டு அடகுக்கடைக்கு போய் அவற்றை அடமானம் வைத்து ஒருலட்சம் திரட்டிவிட்டான்.

அதற்குள் மீராவும் ஒருதடவை போன் பண்ணி"அண்ணா, பணம் கிடைச்சதா?" என்று கேட்டாள்.

"இன்னும் இரண்டு லட்சம் தேவைப்படுது மீரா, என்ன பண்ணுறதென்னே புரியல."

Ghost In bloodDonde viven las historias. Descúbrelo ahora